நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

தமிழ் சினிமாவில் எப்படி வெகு காலங்களாக ரஜினி பிரபலமான நடிகராக இருந்து வருகிறாரோ அதேபோல தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நாகார்ஜூனா.

எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நாகார்ஜூனா. இப்பொழுது தெலுங்கு சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்கள் குடும்பங்களில் நாகார்ஜுனாவின் குடும்பமும் ஒன்று. நாகார்ஜூனாவின் அப்பா மற்றும் அவரது பையன் இருவருமே சினிமாவில் இருந்திருக்கின்றனர்.

தகுந்த பதிலடி கொடுப்பேன்

மூன்று தலைமுறைகளாக இவர்களது குடும்பம் சினிமாவில் இருந்து வருகிறது. இதனால் மிகவும் மதிப்புமிக்க ஒரு நபராக நாகார்ஜுனா தெலுங்கு தேசத்தில் இருந்து வருகிறார். இருந்தாலும் கூட சமீபத்தில் அவரை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாகார்ஜுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

சமீபத்தில் நாகார்ஜுனா தன்னுடைய அரங்கம் ஒன்றை சட்டவிரோதமாக இடித்துள்ளதாக கூறி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறிய நாகார்ஜுனா நான் எந்த ஒரு இடத்தையும் ஆக்கிரமித்து எனது அரங்கத்தை கட்டவில்லை.

எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா

நியாயமான முறையில் பட்டா பெற்று கட்டப்பட்ட அரங்கம்தான் அது ஒரு வேலை அப்படி விதி மீது கட்டப்பட்டிருந்தாலும் கூட அதற்கு நோட்டீஸ் கொடுத்து என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

அப்படி ஒருவேளை  விதி மீறி அந்த கட்டிடம் மட்டும் கட்டப்பட்டிருந்தது என்றால் நானே அதை இடித்து இருப்பேன். ஆனால் என் அனுமதியே இல்லாமல் என்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் தெரிவிக்காமல் எனது அரங்கத்தை இடித்துள்ளனர்.

சட்ட விரோதமா பண்ணல

இதற்காக நான் நீதிமன்றம் வரை செல்வேன் என்று கடுமையாக பேசியிருந்தார். இது என்ன விஷயம் என்று பார்க்கும் பொழுது ஹைதராபாத்தில் நாகார்ஜுனா நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரும் அரங்கத்தை கட்டி இருக்கிறார்.

நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

மாபெரும் பொருட் அளவில் இந்த அரங்கம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த அரங்கம் கட்டப்பட்டது முதலே இந்த அரங்கம் குறித்து நிறைய சர்ச்சைகள் வந்து கொண்டு இருந்தன. முக்கியமாக இந்த அரங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதுதான் பெருவாரியான சர்ச்சையாக இருந்தது.

இந்த நிலையில் இதனை ஆய்வு செய்த மாநகராட்சி துறை பார்க்கும் பொழுது உண்மையிலேயே அங்கு இருந்த ஏரி ஒன்றின் இடத்தை ஆக்கிரமித்து தான் அந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்காக அந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களை நிர்மூலமாக்கி வந்தனர். வந்த வகையில் அரங்கமும் இடிக்கப்பட்டது அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் நாகார்ஜுனா இப்படியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.