இரண்டு நடிகையுடன் திருமணம்..! கே.ஆர்.விஜயா மருமகன் ரஞ்சித் பற்றி தெரியாத தகவல்கள்..!

நடிகர் ரஞ்சித் கடந்த 1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்பொழுது 50 வயதாகும் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னை ஒரு நடிகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக பல்வேறு பரிணாமங்களில் காட்டியிருக்கும் இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் இடையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கி நடித்து தயாரித்தும் இருந்தார்.

இந்த திரைப்படம் தோல்வியை தழுவ மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கினார் நடிகர் ரஞ்சித். அதன்பிறகும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்த இவருக்கு திருமண வாழ்க்கையும் பல சிக்கல்களை உருவாக்கியது.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகை பிரியா ராமன்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் 2014 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை ராதாசுதா-வுடன் இருக்கும் தொடர்பு என்று பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விவாகரத்து செய்த அடுத்த சில மாதங்களிலேயே ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரஞ்சித்.

நடிகை ராகசுதா பல நடிகை கே ஆர் விஜயாவின் சகோதரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகசுதாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நடிகை கே.ஆர்.விஜயாவின் மருமகன் ஆனார் ரஞ்சித்.ஆனால், இந்த திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ராஜசுதாவை பிரிந்தார் நடிகர் ரஞ்சித்.

ராகசுதாவை பிரிந்த ரஞ்சித் தனியாக இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய முதல் மனைவி பிரியா ராமனை சந்தித்து மீண்டும் அவரையே திருமணம் செய்து கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …