ஆசை ஆசையாய் கல்யாண கனவோடு காத்திருந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது நிச்சயதார்த்தத்தை அண்மையில் முடித்து ரசிகர்களின் மத்தியில் திருமணத் தேதியை விரைவில் சொல்லக் கூடிய நிலையில் இருந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட திருமணம் ஆனது நிச்சயதத்தோடு நின்று விட்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்.
நின்று போன திருமணம்..
தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஷைன் சாக்கோ ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டர் ரோலில் நடித்து சால்ட் அண்ட் பெப்பர், 5 சுந்தரிகள், வினோத் அக்கா சூண்டா, டா தடியா போன்ற படங்களில் அடுத்தடுத்து வில்லனாகவும், குணச்சித்திர நடிகனாகவும், ஹீரோவாகவும் பல்வேறு கதாபாத்திரங்களை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவர் மலையாள திரைப்படம் மட்டுமல்லாமல் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்து அனைவரையும் அசத்தியவர். இதை அடுத்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளி வந்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தது நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து தென்னகத்தின் கிரேசாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நானியுடன் இணைந்து தசரா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தென்னிந்திய அளவில் பேமஸான நடிகராக மாறிவிட்டார்.
காதலிக்கு அதை செய்ய முடியல..
இவர் 40 வயதை கடந்த நிலையில் தபீதா மேத்யூஸ் என்கின்ற மனைவி ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ள நிலையில் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து அவரை விட்டு பிரிந்து விட்டார்.
பின்னர் தனது நீண்ட நாள் தோழியும் மாடல் அழகியுமான தனுஜா என்பவர் உடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கான நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்து விட்டதாக சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தது மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது.
இவரது ரசிகர்கள் அனைவரும் இவரது திருமணத் தேதி விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஷைன் டாம் சாக்கோ இருவரும் எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கி விட்டார்.
பிரபல நடிகர் சொன்ன காரணம்..
இப்படி சோசியல் மீடியாவில் இருந்து இருவரது நிச்சயதார்த்த புகைப்படங்களும் நீக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது பேச்சுக்கள் பரவலாக பேசப்படுகிறது.
இதனை அடுத்து இது குறித்து ஷைன் சாக்கோ அளித்த பேட்டியில் தற்போது சிங்கிளாக இருப்பதாக சொல்லி இருப்பதோடு என்ன தான் உண்மையான அன்பை வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை அடுத்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் கவனத்தை திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாகவும் சொன்ன விஷயத்தை பரபரப்பு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்து அந்தப் பெண்ணை கன்வே செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாகவும் கூறிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.