அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது.

ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய்.

விஜய்யின் முடிவு:

2026க்குள் மொத்தமாகவே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்தான் வர இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படம், அதற்குப் பிறகு இயக்குனர் ஹெச் வினோத் அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார்.

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

அதற்கு பிறகு முழுவதுமாக திரைத்துறையை விட்டு விலகுகிறார் நடிகர் விஜய். இதுதான் தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு பிரபலமாக இருக்கும் எந்த ஒரு நடிகரும் திரை துறையை விட்டு விலகியது கிடையாது.

சூசகமாக சொன்ன தளபதி

ஏனெனில் நடிகர் விஜய்யின் 25 வருட உழைப்பு தான் இப்பொழுது அவர் இருக்கும் உயரம். இப்படி இருக்கும் பொழுது அதை விட்டுவிட்டு அரசியல் செல்கிறார் என்பதே வியப்பான விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரியில் கட்சி துவங்கிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அதன் பெயரை வெளியிட்டார்.

அதற்கு பிறகு கொடி மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்த அறிக்கைகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் விஜய். அதன்படி இன்று கட்சியின் கொடி வெளியாகி இருந்தது. இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை பூ இருப்பது போல வெளியான அந்த கொடி இப்பொழுது பிரபலமாகி வருகிறது.

இதை கவனிச்சீங்களா

வெகு சீக்கிரத்தில் கட்சிகளின் கொள்கையையும் வெளியிட இருப்பதாக கூறி இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் கட்சி கொடி வெளியான சமயத்தில் கொடிக்கு என்று ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார் விஜய்.

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

அந்த பாடல் அதிக வைரலாகி வருகிறது அந்தப் பாடலில் ஒரு வரியில் மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது என்று கூறியிருந்தார் மூன்று எழுத்து மந்திரம் என்று அதில் விஜய் குறிப்பிட்டது இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர் அண்ணா அவர்களை தான்.

மூன்று எழுத்து கொண்ட முதலமைச்சரான அண்ணாவும் சரி அதற்கு பிறகு வந்த நடிகர் எம்.ஜி.ஆரும் சரி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக இருக்கின்றனர். அதற்குப் பிறகு மீண்டும் காலம் விஜய்யின் பெயரை மூன்றெழுத்தாக ஒலிக்கிறது என்று அந்த வசனத்தின் வழியாக விளக்கி இருந்தார் விஜய்.

அரசியலுக்குள் வந்த வேகத்திற்கு தன்னை அண்ணா எம்ஜிஆர் உடன் கம்பேர் செய்து கொள்வது சரியா என்று இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன.