செருப்பால் அடிங்க.. ஸ்ரீரெட்டி பண்ண சேட்டை மட்டும் தான்.. விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

செருப்பால் அடிங்க.. ஸ்ரீரெட்டி பண்ண சேட்டை மட்டும் தான்.. விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

சினிமா என்றாலே பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் உள்ள துறை என்பது ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகமாக பதிவாகி இருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே சினிமாவுக்கு செல்லும் நடிகைகளை பொதுமக்கள் மதிப்பது கிடையாது.

அதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் கண்டிப்பாக கற்புடன் இருக்க மாட்டார்கள் என்பது பொது மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா மாதிரியான நடிகைகள் கூட அப்பொழுது மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றவர்களாக இருந்தனர்.

கேரள பாலியல் பிரச்சனை:

இந்த நிலையில் தற்சமயம் முதல்முறையாக இதற்கு கேரள அரசு நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. மலையாள சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஹேமா கமிட்டி என்கிற கமிஷனை அமைத்து பல பாலியல் துன்புறுத்தல் விஷயங்களை வெளியில் கொண்டு வர இருக்கிறது கேரளா அரசு.

செருப்பால் அடிங்க.. ஸ்ரீரெட்டி பண்ண சேட்டை மட்டும் தான்.. விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

இதற்காக அவர்கள் உருவாக்கி இருக்கும் அறிக்கை சீக்கிரத்தில் வெளிவர இருக்கிறது. அது வெளிவரும் பொழுது மலையாள சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் அதில் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மாதிரியான சினிமாவிலும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

விஷால் பேச்சால் அதிர்ச்சி

முக்கியமாக தெலுங்கு சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே இதுக்குறித்து நடவடிக்கைகள் வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்க துவங்கி இருக்கின்றனர். நடிகர்கள் பலருமே இதற்கு ஆதரவு தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர்.

செருப்பால் அடிங்க.. ஸ்ரீரெட்டி பண்ண சேட்டை மட்டும் தான்.. விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஷாலிடம் இந்த ஹேமா கமிட்டி குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது பேசிய விஷால் கண்டிப்பாக தமிழ்நாட்டிலும் இப்படியான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று கூறினார்.

 செருப்பால் அடிங்க

அப்பொழுது பத்திரிகையாளர்,  ஏற்கனவே உங்களைக் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பல விஷயங்களை பேசி இருக்கிறாரே  என்று கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் எனக்கு ஸ்ரீ ரெட்டி யார் என்றே தெரியாது. ஆனால் ஸ்ரீ ரெட்டி பண்ணுன சேட்டைகள் எல்லாம் தெரியும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் குறித்து கூறும் பொழுது நாங்கள் ஒன்றும் போலீஸ் கிடையாது எப்போதும் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருப்பதற்கு உங்களிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் என்று பேசினால் அவர்களை செருப்பால அடிங்க என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் நடிகர் விஷால்.