திருமணதிற்கு பிறகு ஹீரோவாக என்ட்ரியான நடிகர்கள்.. அட இவங்களுமா..?

சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக வர வேண்டும் என்ற கனவோடும் லட்சியத்தோடும் தனது முயற்சியை விடாமல் தொடர்ந்து முயற்சித்து வரும் பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகர் ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என முடிவோடு இருந்து வருகிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட இளைஞர்கள் மத்தியில் திருமணம் ஆகி விட்டு அதன் பிறகு தனது லட்சியமான ஹீரோவாக ஆக வேண்டும் என்பதை நிரூபித்து காட்டிய நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் மாதவன்:

முதலாவதாக பார்க்கப்படுபவர் நடிகர் மாதவன். நடிகர் மாதவன் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதன் முதலில் 2000 ஆண்டு வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

---- Advertisement ----

ஆனால் இவர் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்னரே சரிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு நட்சத்திர நடிகராக பெரும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி:

நடிகர் விஜய் சேதுபதி திரைத்துறை பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது லட்சியமான திரை துறையில் ஹீரோவாக வேண்டும் என்று கனவோடும் கொள்கையோடும் சுற்றித் திரிந்தார்.

தனது அப்பா வைத்திருந்த 10 லட்சம் கடனுக்காக வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து அந்த கடனை அடைத்து விட்டு அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகம் ஆகி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ளார்.

இவர் ஜெசி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதன் பின்னர் ஹீரோவானது குறிப்பிடதக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தனது திறமையை வெளிப்படுத்தி திரை பின்பலம் குடும்பத்தில் பிறந்தவர் இல்லை என்றாலும் தனது திறமையின் மூலம் தன்னை யாரென்று நிலைநாட்டி கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் மூலம் இவர் ஹீரோவாக இன்று பிரபல நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக குழந்தைகளை கவர்ந்த ஹீரோவாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார். இவர் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஹீரோவானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சந்தானம்:

தமிழ் சினிமாவில் நட்சத்திர காமெடி நடிகராக சிறந்து விளங்கி வந்தவர் நடிகர் சந்தானம். இவர் முதன் முதலில் தொலைக்காட்சிகளில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி அதன் பிறகு திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

இவர் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு தான் ஹீரோவாகவும் காமெடி நடிகராகவும் திரைத்துறையில் புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் ஜே பாலாஜி:

ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய ஆர் ஜே பாலாஜி அதில் பல்வேறு திரைப்படங்களையும் நடிகர் நடிகைகளையும் விமர்சித்து பிரபலமானதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

முதலில் காமெடி நடிகராக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் ஹீரோவாக நடித்தார்.

திருமணத்திற்கு பின்னர் தான் திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ராஜ்:

இவர் சீரியல் நடிகராக இருந்து தொகுப்பாளராக பணியாற்றி தொலைக்காட்சிகளில் வலம் வந்து கொண்டிருந்தார்.

அதன்மூலம் திரைப்பட வாய்ப்புகள் அயராது தேடி பின்னர் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஹீரோவாக அறிமுகமாகி அதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு சுருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு 2019 ல் தான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தின் மூலமாக ஹீரோவாகியது குறிப்பிடத்தக்கது.

காமெடி நடிகர் சூரி:

கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் காமெடி நடிகர் சூரி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரது ரசனைக்கும் ஆளான நடிகராக பார்க்கப்பட்டார்.

இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி தற்போது நட்சத்திர ஹீரோவாக பார்க்கப்பட்டவர் இவரது டெடிகேஷன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இவர் ஹீரோவாகவும் காமெடி நடிகராகவும் அறிமுகமாவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் தான் தனது லட்சியத்தை ஜெயித்த நடிகராக இன்று பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----