Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜெயப்பிரதா

80ஸ் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த.. ஜெயப்பிரதா-வின் தற்போதைய நிலை..!

சலங்கை ஒலி படத்தில், இது மவுனமான நேம், இளம் மனதில் என்ன பாரம் – நடிகர் கமலுடன் நடித்த இளமை நாயகி ஜெயப்பிரதாவை, தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. மீண்டும் அதன் தொடர்ச்சியாக, மீ்ண்டும் ஜெயப்பிரதாவை தன்னுடன் ஜோடி சேர்த்திருப்பார் கமல்ஹாசன். அது, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வந்த தசாவதாரம் படத்தில், சர்தார் பாடகர் கேரக்டரில் நடித்த கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

நடிகை ஜெயப்பிரதா, இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். பூமி கோஷம் எனற தெலுங்கு படத்தில் மூன்று நிமிட பாடல் காட்சியில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜெயப்பிரதா. இதுவரை 8 மொழிகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர். சிறந்த நடனக்கலைஞராக மட்டுமி்ன்றி, அரசியல்வாதியாகவும் இருந்திருக்கிறார்.

சிறுவயதில் டாக்டராக ஆசைப்பட்ட ஜெயப்பிரதாவை ஏழு வயதிலேயே நடனம், இசை பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டனர் அவரது பெற்றோர். அதனால் நடனம், இசை வகுப்புகளில் ஆர்வம் காட்டினார் ஜெயப்பிரதா.கடந்த 1979ல் நடிப்பு துறைக்கு வந்த ஜெயப்பிரதா நடிப்பிலும், நடன அசைவிலும் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார். இவரது படங்கள், அப்போதே மெகா ஹிட் படங்களாக, அமைந்தன.

திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜித்ரே, இந்திய சினிமாவின் அழகான நடிகை என ஜெயப்பிரதாவை பாராட்டி இருக்கிறார். ஜீதேந்திரா, அமிதாப் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி, ரிஷிகபூர் என பாலிவுட் ஸ்டார்களின் படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா.இதுவரை 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சலங்கை ஒலி, தசாவதாரம், கேணி, ஏழை ஜாதி, எஸ்பி தேஜா போன்ற சொற்ப எண்ணிக்கை படங்களில்தான் நடித்தார். ஆனால் தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 1962, மார்ச் 3ம் தேதி பிறந்த ஜெயப்பிரதா, நேற்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி படவுலகைச் சார்ந்த நடிகர், நடிகையர் பலரும் அவருக்கு போனிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.  ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு கட்சியில், 1996ல் இணைந்த ஜெயப்பிரதா, முக்கிய பதவியை வகித்தார். அதன்பிறகு ஒரு காலகட்டத்தில், சமாஜ்வாடி கட்சிக்கு மாறினார். இப்படி அரசியலிலும், தன்னை பிரபலப்படுத்திக்கொண்டவர் ஜெயப்பிரதா என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top