என்ன கண்றாவி இது..? லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வித்தியாசமான உடையில் நடிகை அகிலா..! – வைரல் க்ளிக்ஸ்..!

நடிகை அகிலா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல், திருமதி செல்வம், ரோஜா, அஞ்சலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

தமிழில் இதுவரை 40க்கும் மேற்பட்டசீரியல்களில் நடித்திருக்கும் இவர் சீரியல் இயக்குனர் பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது முள்ளும் மலரும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து பொல்லாதவன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, அரசாங்கம், திருவண்ணாமலை, அரண்மனை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நிறைய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் என்னால் சினிமா வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடிக்க முடியவில்லை சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய சினிமா வாய்ப்புகளை நான் தவரவிட்டிருகிறேன் என்று கூறுகிறார் நடிகை அகிலா.

மேலும் எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்ற காரணத்திற்காக நேரம் கிடைக்கும் போது தவறாமல் சினிமா வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறேன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மீடியாவுக்கு வந்துவிட்டேன்.

கடந்த 2005ம் ஆண்டிலேயே நான் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். நிறைய மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்த சுதந்திரம் இப்பொழுது இல்லை என்று நான் நினைக்கிறேன். சில தனிப்பட்ட விஷயங்களை வெளியில் சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.

அது எப்படி.. எந்த விதமா.. ரசிகர்களை போய்ச் சேரும் என்ற பயம் எனக்கு இருக்கிறது. இதனாலேயே என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை வெளியில் செல்ல மிகவும் பயப்படுகிறேன். ஏன் என்றால் நடிகர், நடிகைகள் சொல்லக்கூடிய ஒரு விஷயம் பலவிதங்களில் ரசிகர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. மீடியாக்கள் எழுதப்படுகிறது.

இதனை நான் அன்றாடம் பார்த்து வருகிறேன். எனவே சில விஷயங்களை எனக்குள்ளேயே நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார் நடிகை அகிலா. மறுபக்கம் தனது இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

ஏனெனில் புடவை சகிதம் ஆகவே பார்த்து பழகிவிட்ட இவரை இப்படியான உடைகளில் பார்க்கும் போது ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் அகிலாவா இது..? என்று ஷாக் ஆவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும்,, உள்பாவாடை அணியாமல் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு புடவை சகிதமாக நிற்கும் இவரது சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …