“53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..” – தெறிக்கவிடும் அமலா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

யோகா என்பது மனித வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு கலை. இந்த கலையை செய்வதின் மூலம் உடலை மட்டுமல்ல மனதையும் எப்போதும் உணர்வாக வைத்துக் கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான பிட்னஸ்சை தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் யோகாவுக்கு உள்ளது.

இந்த யோகாவை திரை உலக நட்சத்திரங்கள் மன அமைதியை வேண்டியும் மனப்புத்துணர்ச்சிக்காகவும் அன்றாட தங்களது உடல் ஃபிட்னஸை மெயின்டைன் செய்வதற்காக உடற்பயிற்சியைப் போல் செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை அமலா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் பார்வையில் பட்டு அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் வண்ணம் உள்ளது. இவர் யோகா செய்வதை போட்டோக்களாக வெளியிட்டு இருக்கிறார்.

தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளாக திகழும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.ஆரம்ப நாட்களில் அமலா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தவர்.

அதுமட்டுமல்லாமல் 80 காலகட்டத்தில் இவர் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்திருக்கிறார்.
இவர் மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறனை மட்டுமல்லாமல் நடன திறனையும் வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதனை அடுத்து இவர் பன்னீர் நதிகள், மெல்ல திறந்தது கதவு போன்ற படங்களில் அவர் தனது நடிப்புத் திறனை அழகாக படுத்தினார். இதனை அடுத்து அமலாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் தான் பேசும் படம் வந்தது. இந்தப் படத்தில் இவர் நடித்த பிறகு இவரை பற்றி பேசாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமானார்.

இதை அடுத்து இவர் கொடி பறக்குது என்ற படத்தில் ரஜினியோடு ஜோடி போட்டு நடித்தார். மேலும் வேதம் புதிது படத்தில் இவரது அபாரமான நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்தார்கள்.

கமலுடன் சத்யா படத்தில் பக்காவாக நடித்திருக்கிறார்.அது போலவே வெற்றி விழா படமும் இருந்தது. இந்தப் படத்தில் வளையோசை கலகலவென என வரும் பாடலுக்கு நேர்த்தியாக தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனையடுத்து இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்ததின் காரணமாக எண்பதுகளில் கனவுகன்னி ஆகவே இவர திகழ்ந்தார் என கூறலாம். மேலும் இவர் மணிரத்தினத்தின் அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார்.

அதுபோலத்தான் அஞ்சலி படத்திலும் ஒரு எலி, இரண்டு எலி, மூன்று எலி என்று சொல்வார்களே அதுபோலத்தான் அஞ்சு எலி என்று கூறிய வசனம் இன்று வரை ரசிகர்கள் முன் ஃபேமஸாக உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …