Lover-ஐ மீட் பண்ண போறப்போ.. இதை பண்ணிட்டு போங்க.. – ரகசியம் உடைத்த தொகுப்பாளினி அம்மு ராமசந்திரன்..!

காதலன் காதலியை சந்திக்க செல்லும் போது இந்த வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என தொகுப்பளினியும் நடிகையுமான அம்மு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அம்மு ராமச்சந்திரன் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாகவும் தொகுப்பாளினாகவும் உலா வந்து கொண்டிருக்கும் அம்மு ராமச்சந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் தான் வைத்துள்ள வாசனை திரவியங்கள் மற்றும் அதனுடைய தன்மை அவற்றினுடைய சிறப்பம்சங்கள் குறித்து பேசி இருந்தார்.

முக்கியமாக காதலன் காதலியை அல்லது உங்களுடைய நண்பர்களை தோழியை சந்திக்க செல்லும் பொழுது ரோஜாவின் உண்மையான வாசத்தை கொண்டிருக்க கூடிய வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள்.

அதை பயன்படுத்தினால் நீங்கள் சந்திக்க செல்லக்கூடிய நபர் ஒரு நல்ல மனநிலைக்கு வருவதற்கு அது உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய மனநிலைமைக்கு வருவதற்கு அது உதவியாக இருக்கும் என கூறியிருந்தார்.

மேலும் ஏதேனும் மீட்டிங், விழாக்கள், பார்ட்டி என செல்லும் பொழுது HUGO Deep Red என்ற வாசனை திரவியத்தை பயன்படுத்துகிறேன். இது என் மீதான ஒரு நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருக்கிறது என பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …