இதுக்கு அப்புறம் நடிகைகளுக்கு அது அதிகமாகிடுச்சு.. ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் பல துறைகளில் கால் பதித்து பிரபலமாகி வரும் சில பிரபலங்களில் முக்கியமானவர் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெர்மியா. தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

அதன் பிறகு தொடர்ந்து நடிகையாகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

பாடகியாக அறிமுகம்:

அந்த பாடலில் வரும் பெண் குரலில் பாடிதான் முதன்முதலாக பாடகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. அந்த குரலின் வசீகரம் அப்பொழுதே அதிகமாக பிரபலமானது. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

ஆரம்பத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில்தான் அதிகமாக பாடி வந்தார் ஆண்ட்ரியா. அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் அவர் பாடல்கள் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

---- Advertisement ----

நடிகையாக வரவேற்பு:

இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. கண்ட நாள் முதல் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

இதற்கு நடுவே இசையமைப்பாளர் அனிருத்க்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருந்தது. அந்த விவகாரம் அப்பொழுது பெரிதாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கிய பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆண்ட்ரியா.

கனவு நனவானது:

விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்றாலும் கூட அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு பிறகு அவருக்கு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த ஆண்ட்ரியா எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலாக பேசக்கூடியவர்.

ஆண்ட்ரியா திரைத்துறையில் தொடர்ந்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அவர் நிறைய தடவை பேசி இருக்கிறார். இந்த நிலையில் அது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது முன்பெல்லாம் நடிகைகளை மிகவும் மோசமாக நடத்தி வந்தனர்.

ஆனால் இப்பொழுது வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக மீ டு மாதிரியான விஷயங்கள் வந்த பிறகு நடிகைகளை கொஞ்சம் மரியாதையுடன் நடத்த துவங்கி இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே மீ டு பிரச்சனை உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

 

---- Advertisement ----