வித்தியாசமான காதபாத்திரத்தில் நடிக்க விளைந்த அனுஷ்கா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா ( Anushka Shetty ). தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து பின்னர் அவர் அதனை மறுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் பாகுபலி நடிகர் பிரபாஸை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.

ரசிகர்களும் இவர்களது ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும் என, சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து இந்த செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன.

‘பாகமதி, சைலன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். ‘சைரா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார்.மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம்.இதில் விவகாரமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் அவர் தன்னை விட 20 வயது குறைவான இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம்.

20 வயது இளைஞராக ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார்.நிஜ வாழ்க்கையிலும் 40 வயதைத் தொட்டுள்ள அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …