வெள்ளி திரையில் துணை கதாபாத்திரங்களில் அக்கா அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த பூ நடிகையை சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக தயாரிப்பாளர் ஒருவர் அணுகி இருக்கிறார்.
சீரியல் வாய்ப்பு தேடி வருவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட அந்த நடிகை அதன் பின்னால் இருக்கும் விஷயத்தை கேட்டு சீரியலில் நான் நடிக்கவில்லை என்ற மறுத்திருக்கிறார்.
சீரியலில் ஹீரோயினாக வேண்டும் என்றால் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர் நேரடியாக கேட்க கடுப்பான நடிகை சீரியல் வாய்ப்பு தேவை இல்லை என மறுத்திருக்கிறார்.
அதன் பிறகு சீரியலில் நடிப்பதற்கான சம்பளம் என்று 100 எபிசோடுகளுக்கான சம்பளத்தை ஒரே செக்கில் போட்டு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். செக்கில் இருந்த தொகையை பார்த்து அதிர்ந்து போன நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்.
இவ்வளவு சம்பளம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் இதற்கு பின்னால் ஏதோ இருக்கிறது என தயாரிப்பாளரை அணுகி இருக்கிறார். அவர் நினைத்தது போலவே என்னுடைய சீரியலில் ஹீரோயினாக நீங்கள் நடிக்கலாம் சம்பளமும் இதுதான் இன்னும் வேண்டுமா கேளுங்கள்.
ஆனால்…. என்று இழுத்து இருக்கிறார். அவர் ஆனால்.. என்று இழுக்கும் போதே இவருக்கு தெரிந்திருக்கிறது எதற்காக இழுக்கிறார் என்று. எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டாம் இதைவிட குறைவான சம்பளம் கூட கொடுங்கள் நான் ஹீரோயினாக நடிக்கிறேன்.
ஆனால் உங்களுடைய ஆசைக்கு என்னால் இணங்க முடியாது என கூறியிருக்கிறார். அப்படி என்றால் நீங்கள் ஹீரோயினாக நடிக்க வேண்டாம் என்று அந்த நடிகை கொடுத்த செக்கை திருப்பி வாங்கி இருக்கிறார் தயாரிப்பாளர்.
அதன் பிறகு வேறு தயாரிப்பாளரை அணுகி தற்பொழுது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது போன்ற சின்ன சின்ன உப்மா தயாரிப்பாளர்கள் தான் இப்படியான பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சமாச்சாரங்களில் ஈடுபடுவது என பேட்டி ஒன்றில் பகிரங்கமாக பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.