Actress | நடிகைகள்
நடிகை கோபிகா-வின் தற்போதைய நிலை என்ன..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
பார்க்கும்போது ஆளே அடையாளம் தெரியவில்லை என்று சொல்லக்கூடிய நிலையில் தற்போது நடிகை கோபிகா (Gopika) இருக்கிறார். இவரது அண்மை குடும்ப புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு அவரது நிலைமை மிக எளிதில் புரிந்து விடும்.
இந்தக் குடும்ப புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்கள் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Gopika
இந்த புகைப்படத்தில் கோபிகாவின் மகன், மகள் மற்றும் குடும்பத்தாரோடு இணைந்து இருக்கும் போட்டோஸ் தான் ரசிகைகள் அதிகளவு பார்க்கும் புகைப்படமாக இருக்கிறது.
நடிகை கோபிகா 1985 ஆம் ஆண்டு கேரளாவில் திருச்சூரில் பிறந்தவர். சினிமாவின் மீது கொண்ட காதலால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் தான் இவர் நடிக்க ஆரம்பித்தார். இந்த படம் ஒரு மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது.

Gopika
அந்த வகையில் இவர் தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ஹிட்டான படங்களில் ஒன்றாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது.
குறிப்பாக இயக்குனர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு பெண்ணும் மகனும் இருக்கிறார்கள்.

Gopika
திருமணத்திற்குப் பிறகு முற்றிலும் திரை உலகத்திலிருந்து வெளியேறிவிட்ட இவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ளக்கூடிய அற்புதப் பெண்மணியாக திகழ்கிறார்.
மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற குடும்ப புகைப்படத்தை பார்க்கும் போது அட இது நம்ம கோபிகா வா என்று கேட்கக் கூடிய அளவு இவரது முக ஜாடை முழுமையாக மாறி உள்ளது.
கணவன் மற்றும் பிள்ளைகளோடு இருக்கும் எந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களுக்கு அதிக லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.
You must be logged in to post a comment.