தெலங்கானா கிழக்கு கோதாவரி மாவட்டம், ரஸோலைச் சேர்ந்த குடும்பத்தில் கிருஷ்ண வேணியாகப் பிறந்தார் நடிகை ஹேமா (Actress Hema Kolla ) . ஏழாம் வகுப்பு வரை படித்த இவர், சினிமா மீது இருந்த மோகம் காரணமாக படிப்பை நிறுத்தினார். சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.
இதனால், தன்னுடைய 16-வது வயதிலேயே சினிமாவில் துணை நடிகையாக நுழைந்தார். சில படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டார். முராரி படத்தின் மூலம் மீண்டும் படத்திற்கு திரும்பிய அவர், இப்போது தனது திரைப்பட வாழ்க்கையை தொடர்கிறார்.
சினிமாத்துறைக்கு வந்த பிறகு தனது பெயரை ஹேமா என்று மாற்றிக்கொண்டார்.முக்கியமாக தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்து வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழாவது நாளே எவிக்ட் செய்யப்பட்டார்.
இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, 52 வயது ஆகும் இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் தோன்றி அசத்துகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தான் இவை.