keerthhy-suresh
keerthhy-suresh

கத்தரிக்கா முத்திடுச்சு.. கடைக்கு வந்துடுச்சு.. அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட அதன் பிறகு வந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து வரிசையாக பெரும் நடிகர்களுடன் நடித்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை பெரிதாக கவர்ச்சி காட்டினால்தான் அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்னும் நிலை கிடையாது.

அவர்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலே மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு உதாரணமாவார்.

தமிழில் கிடைத்த வரவேற்பு:

keerthi-suresh
keerthi-suresh-stills

அவர் ரஜினி முருகன் திரைப்படத்தில் வெகுவாக வரவேற்பை பெற்றாலும் அதற்கு பிறகு வந்த தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. பிறகு அவரது நடிப்பை வெளிக்காட்டும் விதமாக அவர் நடித்த திரைப்படம் நடிகையர் திலகம் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் தமிழ் சினிமா துறை போன்றே மற்ற சினிமா துறைகள் இருப்பதில்லை. தமிழ் சினிமாவில் பிரபலமானதை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் பிரபலமாக ஆசைப்பட்டார் கீர்த்தி சுரேஷ்.

---- Advertisement ----

தெலுங்கில் எண்ட்ரி:

அந்த வகையில் அவர் 2022 ஆம் ஆண்டு நடித்த தெலுங்கு திரைப்படம் சர்க்காரி வாரிபட்டா இந்த திரைப்படத்தில் கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சில பாடல்களில் கொஞ்சம் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் தற்சமயம் பாலிவுட்டில் பேபி ஜான் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தில் முத்தக் காட்சியிலேயே நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய்,சமந்தா நடித்து வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த தெறி திரைப்படத்தின் ரீமேக் தான் பேபி ஜான் என்று பாலிவுட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் அதிக கவர்ச்சி இருந்தால் மட்டும்தான் நடிகைகள் பிரபலமாக முடியும் என்பதால் தற்சமயம் முத்தக் காட்சியில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் விரைவில் தென்னிந்தியாவிலும் கூட இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

---- Advertisement ----