Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress Malavika

நடிகை மாளவிகா-வின் கணவரை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படம்..!

நடிகை மாளவிகா ( Actress Malavika ) உதட்டு சுழிப்பில் ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை. இவரது உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர். சினிமாவுக்காக மாளவிகா என மாற்றிக்கொண்டார். இவர் மாடலிங் துறையில் இருந்தார். எண்ட் லவ்லீ மாடல் ஆக, இருந்திருக்கிறார். தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் பல படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார்.

தமிழில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜித் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு, கிடைத்தது. படமும் வெற்றி பெற்றதால், மாளவிகா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Actress Malavika

அடுத்து, சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் மாளவிகா நடித்தார். இதுவும், நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல், டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில், ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் நடனடமாடி அனைவரையும் கவர்ந்தார். முதன் முதலில், கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நடிகை, ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் கலாசாரத்துக்கு முதலில் வித்திட்டவர் மாளவிகா தான்.

Actress Malavika

அடுத்து, கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருந்தார். ரோஜாவனம் படத்தில், கார்த்திக் ஜோடியாக நடித்தார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெற்றிக்கொடி கட்டு படத்தில், முரளிக்கு ஜோடி இவர்தான்.

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டார். அடுத்து ரஜினிகா்ந்த் நடித்த சந்திரமுகி படத்திலும், இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது, வியாபாரி, திருமகன் படங்களிலும் நடித்திருந்தார்.

--Advertisement--

மாளவிகா நடிப்பில் திருட்டுபயலே படம், அதிக கவனத்தை ஈர்த்த படம். கோடீஸ்வர கணவரின் நண்பருடன், மாளவிகளாவுக்கு தவறான உறவு ஏற்பட, அதை வீடியோ படம் பிடித்து, கதாநாயகன் மிரட்டும் கதை. டைரக்டர் சுசி கணேசன் இயக்கிய இந்த படம், வெற்றி பெற்ற படம். அடுத்து, சீ யூ எட் 9 என்ற பாலிவுட் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

Actress Malavika

நடிகை மாளவிகா, அழகான நடிகையாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சில படங்களில், அபாரமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சில படங்களில், சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும், மாளவிகாவின் ரசிகர்கள் அவர் நடித்த அந்த சில காட்சிகளுக்காகவே படம் பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமாவில், தன் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட மாளவிகா, கடந்த 2007ம் ஆண்டில் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார், இப்போது கோல்மால் என்ற படத்தில் அவர் நடித்து வருவதாக தகவல் உள்ளது. மாளவிகா – சுமேஷ் மேனன் தம்பதிக்கு ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் உள்ளனர்.

Actress Malavika

சமீபத்தில் மாளவிகா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல பேருடைய தூக்கத்தை கெடுத்த நடிகை மாளவிகாவின் கணவரா இவர், என அந்த புகைப்படங்களை ஆர்வமாக பார்த்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

40 வயதுகளை கடந்து, பழைய இளமை, அழகு, கவர்ச்சி மாறால் இருக்கும் மாளவிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தால் தமிழ் சினிமாவில் அண்ணி, அக்கா கேரக்டர்களில் கூட ஒரு ரவுண்டு வரலாமே, என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top