ஆத்தாடி.. மீனாவின் பிரம்மாண்ட கேரளா ஸ்டைல் பங்களாவை பார்த்து எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை கனவு கன்னியாக வலம் வரும் கண்ணழகி மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து வளர்ந்த பிறகு பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து பல மாசான வெற்றி படங்களை தந்த முன்னணி ஹீரோயினியாக விளங்குகிறார்.

நடிகை மீனா..

எவர்கிரீன் நடிகையாக இருக்கக் கூடிய நடிகை மீனா ஒரு மிக சிறப்பான நடிகை என்பது யார் சொல்லியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இவர் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் சொந்தமாக வீட்டினை வைத்திருக்கிறார்.

இந்த வீட்டை அவர் கேரளா முறைப்படி கட்டி இருப்பது அண்மையில் மீனாவின் ஹோம் டூர் வீடியோ ஒன்றில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வீட்டை பார்த்து அசருவதா? அல்லது மீனாவைப் பார்த்து அசருவதா? என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளி வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் அழுத்தமான கேரக்டரை செய்து அனைவருது மனதிலும் இடம் பிடித்தவர்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்தந்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.

மீனாவின் கேரளா ஸ்டைல் பங்களா..

எனினும் அண்மையில் இவரது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்ததை அடுத்து கடுமையான சோகத்தில் இருந்த இவர் தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

மேலும் இவர் ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். அது போலவே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்காக தனது வீட்டை சுற்றி காட்டிய இவர் கேரள பாரம்பரிய முறைப்படி இவரது வீடு கட்டப்பட்டதை அடுத்து வீடு பார்ப்பதற்கு அரண்மனை போல உள்ளதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த வீட்டில் பல்வேறு விதமான செடிகள், பூந்தோட்டம், அடுக்குமல்லி செடி என அனைத்தையும் உள்ளதை பார்த்து மயங்கி இருக்கக் கூடிய ரசிகர்கள் அந்த பூந்தோட்டத்திற்கு நடுவே கற்களால் ஆன சிற்பங்கள் இருப்பதைப் பார்த்து அசந்து இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இவர் வீட்டில் ஸ்விம்மிங் பூல், மினி தியேட்டர், ஆறுக்கும் மேற்பட்ட அறைகள் என மிகச் சிறப்பான முறையில் வீட்டைக் கட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்துவிட்டார்கள்.

பார்த்ததும் எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..

அது மட்டுமல்லாமல் நடிகை மீனாவின் வீட்டை பார்த்ததும் எச்சில் விழுங்கி வரும் நெட்டிசன்கள் ஏறக்குறைய மீனாவின் சொத்து மதிப்பு மட்டும் 35 கோடியில் இருந்து 40 கோடி இருக்கும் என்று மனக்கணக்கு போட்டு இருக்கிறார்கள்.

மேலும் வீட்டை மிகச் சரியான முறையில் பராமரித்து இருப்பதாகவும் வீட்டை பார்ப்பதற்கு லட்சுமி கடாட்சமாக உள்ளது என்றும் கேரளா ஸ்டைலில் யார் பார்த்தாலும் அசந்து போக கூடிய வகையில் தான் இவரது வீடு உள்ளது என்று கமாண்டுகளில் சொல்லி இருக்கிறார்கள்.

---- Advertisement ----

Check Also

SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!

90-களில் சன் டிவி உதயமான சமயத்தில் விஜய சாரதியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை …