தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார்.
அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
இவரை போலவே இவருடைய மகளும் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். சமீபத்தில் மீனா தன்னுடைய செல்ல மகள் நைனிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியை தோழிகளுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ள மீனா அதன் புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
சில்வர் கலர் உடையில் கொளுகொளுவென இருக்கும் மீனாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.