Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

தனிமையில் இனிமை காணும் மீனா..! லண்டனில் நச் ஸ்நாப்ஸ்..!

மீனா பொண்ணு மீனா பொண்ணு என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்கார நடிகையான நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானதை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்றவர்.


தமிழிலும் முன்னணி நடிகர்களோடு நடித்த கண்ணழகி மீனா தனது அசாத்திய நடிப்பு திறமையால் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர்.

நடிகை மீனா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாளில் கதாநாயகி அந்தஸ்தை பெற்ற நடிகை மீனா தற்போது குணச்சித்திர கேரக்டர்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார்.

மீனாவின் கண் அசைவை பார்த்து மயங்கி விட்ட ரசிகர்கள் அனைவரும் அவரது சிறப்பான நடிப்பில் கட்டுண்டு விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை மீனா நடிகர் அஜித்தோடு இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் ஜோடி சேர இருப்பதாக சொல்லப்படுகிறது.

--Advertisement--

மீனாவுக்கு போட்டியாக இடுப்பழகி சிம்ரன் இந்த ரேஸில் இணைந்து இருப்பதால் அஜித்துக்கு ஜோடியாக மீனாவா? சிம்ரனா? யார் இணைவார் என்ற நிலையை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்த மீனா காதல் கிசுகிசுகளில் அதிகம் சிக்காதவர். இதனை அடுத்து திரைப்படத்தில் பிஸியாக நடிக்கும் போதே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண்ணும் இருக்கிறார்.


எனினும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கை கொரோனா என்ற கொடூர அசுரனால் தனது கணவர் மரணமானதை அடுத்து சில காலங்கள் சினிமாவில் தலை காட்டாமல் சோகத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனிமையில் இனிமை..

குழந்தை பருவத்தில் இருந்தே தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்து இவர் என் ராசாவின் மனசிலே என்ற தமிழ் படத்தில் ராஜ்கிரனுடன் இணைந்து இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்துதிருந்தாலும் தனது நடிப்பால் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தார்.

ரஜினியோடு இணைந்து எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இன்று வரை தன்னுடைய அனுபவத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய நடிகையாக இருக்கிறார்.


மேலும் இவரது நடிப்பு கேரியரை திருமணமோ, பிள்ளை பேரோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இவரது மகளும் ஒரு குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் உடன் தெறி திரைப்படத்தில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் நச் ஸ்நாப்ஸ்..

கணவனின் இறப்புக்கு பின்னால் மனதளவில் சோகத்தில் இருந்த நடிகை மீனா தற்போது அதிலிருந்து வெளி வர அடிக்கடி தன் தோழிகளுடன் சுற்றுலா சென்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது லண்டனில் சுற்றுலா நாட்களை கழித்து வரும் மீனா அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இன்றும் இளமையுடன் இருக்கின்ற மீனாவை பார்த்து இவருக்கு வயதை ஆகாதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.


மேலும் இந்த புகைப்படத்தில் கோட் சூட்டுடன் எவர்கீரின் நடிகையாக காட்சியளித்திருக்கும் மீனாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அதிக அளவு கிடைக்க சந்தர்ப்பம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மீனாவின் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் லண்டனில் தனிமையில் இனிமை காணும் மீனாவின் புகைப்படங்களை தாறுமாறாக ரசித்து வருவதோடு மீனாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top