90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நக்மா ( Actress Nagma ) தன்னுடைய தங்கை ஜோதிகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா.
நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார்.பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால், நடிகை நக்மா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
பிரபல அரசியல் கட்சி ஒன்றில் நட்ச்சத்திர பேச்சாளராக இருக்கும் நக்மா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ். அரசியல் குறித்துஅதிரடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், நானும் ஆட்டத்துல இருக்கேன் நடிகை நக்மாவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.