என் கல்யாணம் இப்படித்தான் நடந்துச்சு.. ஜோதிகா தெனாவெட்டு பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

நடிகை ஜோதிகா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து முன்னணி நடிகைகளுக்கு இணையாக போட்டி போட்டு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனதாக்கியவர்.

தன்னுடைய சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குழந்தையை குடும்பம் என பிறகு 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஜோதிகா அவ்வப்போது சர்ச்சையான பேச்சுக்களை பேசி வம்பில் சிக்க கூடிய ஒரு நபராக இருக்கிறார். இடையில் தஞ்சை பெரிய கோயில் குறித்தும் மருத்துவமனை பராமரிப்பு குறித்தும் கோயிலுக்கு செலவு செய்வதை மருத்துவமனைக்கு செலவு செய்யலாம் என்று ஒப்பிட்டு பேசி பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

jyotika_tamizhakam_cinema_news (1)

இந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இவருடைய இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்தது. இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெனாவட்டாக பேசி இருக்கும் நடிகை ஜோதிகாவின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

உங்களுடைய காதல், திருமணம் இதெல்லாம் எப்படி நடந்தது..? என கேள்வி எழுப்புகிறார் நெறியாளர். இதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா என்னத்த காதல்.. என்னத்த கல்யாணம்.. என்னத்த குடும்பம்.. என்று சலித்துக் கொள்வது போல தெனாவட்டான தொணியில் பதில் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, என்னுடைய திருமண வாழ்க்கை ரொம்ப போரிங்கானது. நாங்கள் இருவரும் சந்தித்தோம்.. கல்யாணம் செய்து கொண்டோம்.. அப்படியே 15 ஆண்டுகள் ஓடி விட்டது.. என்று தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏதோ நாட்டமே ஏதாவது போல பேசி இருக்கிறார் நடிகை ஜோதிகா.

jyotika_tamizhakam_cinema_news (5)

திருமணத்தில் ஜோதிகா சூர்யா திருமணத்தில் என்னென்ன கூத்துகள் நடந்தது..? அவருடைய வீட்டில் எழுந்த பிரச்சினைகள் என்ன..? ஜோதிகா சூர்யா திருமணத்தில் பத்திரிகைகளின் பங்கு என்ன..? இன்னும் சொல்லப்போனால் பத்திரிகைகளில் வந்த செய்திகள் மட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் காரணமாக தான் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதெல்லாம் பொதுவெளியில் இருக்கக்கூடிய விஷயங்கள்.

இன்னும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜோதிகா சூர்யா திருமணத்தை அடுத்து நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கூறிய அறிவுரைகள் இதெல்லாம் நடிகர் சிவகுமார் வாயாலேயே வெளிவந்த உண்மைகள்.

பேட்டி ஒன்றில் பேசிய சிவகுமார் சூர்யா ஜோதிகா திருமணத்தை நான் எதிர்த்தேன் என கூறுகிறார்கள். திரைப்படங்களில் எத்தனையோ பேரை காதலிப்பது போல் நடித்துவிட்டு என்னுடைய மகன் காதலை நான் எதிர்ப்பேனா..? என்று பூசி மொழுகினார்.

jyotika_tamizhakam_cinema_news (4)

ஆனால், மேடை ஒன்றில் அதற்கு நேர்மாறாக பேசியிருந்தார். அதாவது சூர்யா திருமணம் முடிந்த பிறகு கார்த்தியின் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக ஜெயலலிதாவை பார்க்க சென்றிருந்தோம்.

அப்போது உன்னுடைய அண்ணன் தான் உன் அப்பா அம்மாவுக்கு பிடிக்காமல் ஒரு திருமணத்தை செய்து கொண்டார். நீயாவது உன்னுடைய சாதியில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டு உன்னுடைய அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்து என கார்த்தியிடம் கூறினார்.

இப்படி ஒரு முதலமைச்சர் என் மகனுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும், எங்களுடைய குடும்பத்தின் மீது அவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்று பேசியிருந்தார் சிவக்குமார்.

jyotika_tamizhakam_cinema_news (3)

இதன் மூலம் சூர்யா ஜோதிகாவின் திருமணம் செய்து கொண்டது தனக்கும் தன் மனைவிக்கும் பிடிக்கவில்லை என்பதை சூசகமாக பதிவு செய்திருந்தார். இப்படி பல்வேறு பிரச்சினைகளை கடந்துதான் ஜோதிகா திருமணத்தை செய்திருக்கிறார்.

ஆனால், பேட்டியில் பேசும்போது எதுவும் நடக்காது போலவும் தெனாவட்டான தொணியிலும் இவர் பேசியிருப்பது ரசிகர் மத்தியில் எதிர்ப்பை பெற்று வருகிறது. அதே சமயம் ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam