“என்ன செல்லப்பேரு ஆப்பிள்..” நடிகை முமைத்கான் இப்போ எப்படி இருக்கார்..? என்ன செய்கிறார் பாருங்க..!

நடிகை முமீத்கான் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகையாக பிரபலமானவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்றும் கூட நடித்திருக்கிறார்.

actress-mumaith-khan (4)

கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படத்தில் இடம்பெற்ற ஹரி கோயே போன் சாயி சம்பா நெல்லாலே என்ற பாடலில் பின்னணி நடன கலைஞர்களில் ஒருவராக நடனமாடியதன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பாய்ஸ் திரைப்படத்தில் டேட்டிங் பாடலில் நடனம் ஆடி இருப்பார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம் பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்ற பாடல் தான்.

actress-mumaith-khan (2)

மேலும், நடிகர் விஜயின் போக்கிரி திரைப்படத்தில் இடம் பெற்ற என் செல்லப்பேரு ஆப்பிள் என்ற பாடலில் பாட்டு மோசமான கிளாமர் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக, வில்லு, கந்தசாமி, சிறுத்தை, மம்பட்டியான், ரகளபுரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் கலந்து கொண்ட சில நாட்களிலேயே போதை பொருள் வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

actress-mumaith-khan (1)

இப்படி பிரபலமான நடிகை முமைத்கான் தற்போது மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்யக்கூடிய அழகு நிலையம் ஒன்றை ஹைதராபாத்தில் நிறுவி அதனை நிர்வகித்து வருகிறார்.

மேலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக மாடலிங்கில் நுழைய விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தும் வருகிறார் நடிகை முமைத்கான்.

actress-mumaith-khan (3)

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது அவற்றை நீங்கள் பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam