Connect with us

ஹீரோயின்

இது வந்தப்போ நெறைய பட வாய்ப்பு வரும்ன்னு நெனச்சேன்.. ஆனால்.. கூச்சமின்றி கூறிய நீலிமா ராணி..!

By TamizhakamOctober 29, 2024 6:48 PM IST

சின்னத்திரை சினிமா என இரண்டு தலைகளிலும் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை நீலிமா ராணி.

சமீபத்திய பேட்டி ஒன்றிய பேசிய ஆவர் மன்னர் வகையறா படத்தில் நடித்த முடித்தேன். அந்த வந்தப்போ அடுத்தடுத்து நமக்கு பட வாய்ப்புகள் வரும் என ஆவலுடன் காத்திருந்தேன்.

ஏனென்றால் அந்த படத்தின் காட்சிகள் யூடியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருந்தது.

சரி இந்த படம் வெளியானால் இந்த படம் வந்தால் நமக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் அடுத்த தேவதர்ஷினி அக்கா நாம தான் என்றெல்லாம் கனவு கண்டேன்.

ஏனென்றால் மன்னர் வகையறா திரைப்படத்தில் நானும் சரண்யா அம்மாவும் அந்த அளவுக்கு காமெடி பண்ணி நடித்திருந்தோம்.

ஆனால், அந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வரை எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை.

இதை சொல்வதற்கு எனக்கு கூச்சம் இல்லை. ஏனென்றால் நிறைய விஷயங்களை நம்மால் யூகிக்கவே முடியாது. நாம் யோசித்து கூட பார்க்காத விஷயங்கள் திடீரென நடக்கும்.

நாம் எதிர்பார்த்து காத்து இருக்க கூடிய விஷயங்கள் நடக்காமல் போய்விடும். பலரும் நான் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்று கூறுகிறார்கள்.

அப்படியெல்லாம் கிடையாது எனக்கு வரக்கூடிய பட வாய்ப்புகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டு நடிக்கவே முயற்சி செய்கிறேன் என பேசியுள்ளார் நடிகை நீலிமா ராணி.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top