Connect with us

ஹீரோயின்

«தன் மகனே தன்னை தே*** என்று அழைப்பது எவ்வளவு கொடுமை..» நடிகை நதியா எடுத்த திடீர் முடிவு..!

By TamizhakamOktober 1, 2024 11:56 AM IST

நடிகை நதியா 80களில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் தற்போது வரை இவருக்கென ரசிகர்கள் மத்தியில் தனி பெயர் இருக்கிறது.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவருடைய உண்மையான பெயர் ஜரீனா மொய்டு ( Zareena Moidu ) என்பதாகும்.

திரைப்படங்களில் குடும்பப்பாங்கான ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நதியா.

தற்போதும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் ஒப்பந்தமானவர் நடிகை நதியா தான்.

இந்த படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட நடிகை நதியா படமாக்கும் விதம் கதையின் நகர்வு ஆகியவற்றை உணர்ந்து கொண்டு இந்த படத்தில் இருந்து விலகினார்.

இத்தனை நாட்கள் நான் சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த பெயரும் இந்த ஒரு படத்தினால் கெட்டுப் போய்விட வாய்ப்பு இருப்பதாக பயந்து போன நடிகை நதியா இந்த படத்தில் இருந்து விலகினார்.

அதன் பிறகு தான் நடிகர் ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வாய்ப்பு சென்றது. இந்த படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தன்னை தே*** வார்த்தை கொண்டு திட்டுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.

இந்த காட்சியை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து தான் போனார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரம்யா கிருஷ்ணன் எப்படி ஒப்புக்கொண்டார்..? என்று பலரும் வியந்தார்கள்.

ஆனால், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு நடிகையாக இயக்குனர் சொல்வதை செய்வது தான் என்னுடைய வேலை படத்தின் கதையும் அதனை நிரூபிக்கும் விதமாக இருந்தது. நடிகையாக நான் செய்யும் அனைத்துமே என்னுடைய வேலை.

தனிப்பட்ட விதத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். நடிகையாக நான் என்னுடைய கடமையை செய்திருக்கிறேன் என கூறியிருந்தார் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.

ஆனால் தன்னுடைய மகன் வாயால் தன்னை தே*** என்று அழைப்பது எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்த நடிகை நதியா இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். நதியாவின் இந்த முடிவு குறித்த உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top