“என்கிட்ட இதை எதிர்பாக்காதிங்க..” திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் அதை சொன்ன பாப்ரி கோஷ்..!

தமிழில் பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பாப்ரி கோஷ் தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் திருமணமும் செய்து கொண்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்கள் கணவர் உங்களுடைய வேலை மற்றும் பணியாற்றக்கூடிய சூழல் இவை அனைத்தையும் புரிந்து கொண்டாரா..? உங்களுடைய மாமியார் வீட்டில் இதை புரிந்து கொண்டார்களா..? என்ற கேள்வியை எழுப்பினார் தொகுப்பாளனி.

actress-papri-ghosh 2

இதற்கு பாப்ரி கோஷ் யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்தார். அவர் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் என்னுடைய அப்பா ஒரு விஷயத்தை தெளிவாக கூறினார்.

என் பொண்ணு சமைப்பா.. ஆனால் என்னைக்காவது ஒரு நாள் தான் சமைப்பா. அவள் தினமும் சமைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் வேறு பெண்ணை பார்த்துக்கோங்க..

actress-papri-ghosh 3

அவளுக்கு நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.. திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடருவால்.. இதுக்கு சம்மதம் என்றால் இந்த திருமணத்திற்கு நாங்கள் சம்மதிக்கிறோம். இல்லை என்றால் நீங்கள் வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள்.

திருமணமாகிய பிறகு திருமணம் ஆகிவிட்டது இனிமேல் நாம் சொல்வதுதான் என்று திருமணத்திற்கு பிறகு நீங்கள் நடிக்க போகக்கூடாது.. தினமும் சமைக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால் அது சரியாக இருக்காது.. எங்கள் தரப்பு விஷயத்தை நான் உங்களிடம் தெளிவாக கூறிவிட்டோம் இனிமேல் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று என்னுடைய அப்பா என் மாமியார் வீட்டில் கூறிவிட்டார்.

actress-papri-ghosh 4

அந்த நேரத்தில் எல்லாவற்றுக்கும் சரி என ஒப்புக்கொண்ட பிறகு தான் திருமணமே நடந்தது என கூறியிருக்கிறார் நடிகை பாபு

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam