ரகுவரனிடம் எனக்கு அது கெடைக்கல.. விவாகரத்து ரகசியத்தை உடைத்த நடிகை ரோகிணி..! என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

நடிகை ரோகினி தமிழ் சினிமாவின் முன்னணி துணை நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கிறார்.

பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கின்றன தேசிய விருது உட்பட பல புகழ் பெற்ற விருதுகள் இவருக்கு கிடைத்திருக்கின்றன.

rohini-raguvaaran 4

தற்போது படங்களில் நடிப்பதுடன் பல கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொள்கிறார்.

இவர் வில்லன் நடிகர் ரகுவரனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைக்கு தாயுமான இவர் ஒரு கட்டத்தில் அவருடன் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்நிலையில், என்னுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார் நடிகை ரோகிணி.

rohini-raguvaaran 3

அவர் கூறியதாவது, என்னுடைய திருமண வாழ்க்கையில் எனக்கு நடந்த வன்முறையை பற்றி பேசுவதற்கு இடமே இல்லாமல் இருந்தது.

எனக்கு நடந்த கொடுமைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் இருந்தேன். அதை நான் பேசிய போது என்னுடைய பிரச்சினைகள் எனக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்தபோது எனக்கு அந்த வீட்டில் இருக்க இடம் மறுக்கப்பட்டது.

இந்த கொடுமைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் ஒரு தன்னம்பிக்கை மிக்க,  பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லாத ஒரு பெண்,.. சம்பாதிக்க கூடிய ஒரு பெண்,.. எனக்கே இப்படியான கொடுமைகள் எல்லாம் நடக்கிறது எனும் பொழுது இப்படி எந்த ஒரு பின்புறமும் இல்லாத பெண்களுக்கு எல்லாம் எப்படியான கொடுமை எல்லாம் நடக்கும் என நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

rohini-raguvaaran 2

அந்த வீட்டில் எனக்கான பாதுகாப்பு கிடைக்கவில்லை. என்னுடைய மகனை நான் தான் நன்றாக வளர்க்க முடியும் என்னால் தான் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கவே நான் போராட வேண்டியிருந்தது.

இப்படி என்னுடைய விவாகரத்துக்கு காரணங்கள் பல இருக்கின்றன என பேசி இருக்கிறார் நடிகை ரோகிணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam