Connect with us

ரிலீஸ்க்கு முன்பே 100 கோடி ! பட்டைக்கிளப்பும் மாவீரன் சிவகார்த்திகேயன்

actor siva, maveeran, sivakarthikayan

Actress | நடிகைகள்

ரிலீஸ்க்கு முன்பே 100 கோடி ! பட்டைக்கிளப்பும் மாவீரன் சிவகார்த்திகேயன்

தற்பொழுது தமிழ் சினிமாவில் விஜய் அஜித் தனுஷ் சூர்யாவுக்கு அடுத்தபடியாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய கடந்த சில பாடங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு சரியாக போகவில்லை.

டான் திரைப்படம் இவருக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள்டிராக் வெளியிடப்பட்டது . இந்த படத்தில் சுமார் 500 நடன கலைஞர்கள் இடம் பெற்றிருந்தார்கள் இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

actor siva, maveeran, sivakarthikayan

மேலும் இந்த பாடலில் மோகோபாட் என்னும் அதிநவீன கேமரா மூலம் படமாக்கியுள்ளார்கள். ஏற்கனவே இந்த கேமராவை பயன்படுத்தி விக்ரம் திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ் .

தற்போது இந்தப் படத்திலும் அதே கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். இதேபோல் OTT  உரிமையை தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் மிஷ்கின் சிவகார்த்திகேயன் மற்றும் புஷ்பா இதில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் சுனில் நடித்துள்ளார்.

actor siva, maveeran, sivakarthikayan

இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் சூட்டிங் முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்,

மேலும் யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது கிடைத்த தகவல்களின் படி ரிலீசுக்கு முன்பே இப்படம் 83 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஃபிலோமின ராஜ் தான் இந்தப் படத்திற்கும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்தப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே மண்டேலா எனும் ஒரு வெற்றிப் படத்தை இயக்கியிருந்தார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா இந்த படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இதுபோல  சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதளப்பாக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top