Actress | நடிகைகள்
இணையத்தில் வெளியான 5 செகண்ட் காட்சி..! – வைரலாகும் வீடியோ..! – அதிர்ச்சியில் ஜவான் படக்குழு..!
தமிழ் திரையுலகில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி .இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு பிரபல டைரக்டர் ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்தார்.அதற்குப் பிறகு விஜயை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அதற்குப் பிறகு நீண்ட காலம் திரைபடம் எதுவும் இயக்கவில்லை.தற்பொழுது ஜவான் என்னும் இந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன்மூலம் ஹிந்தி திரையுலகிலும் அட்லீ காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி மற்றும் பிரியாமணி தனியா மல்கோத்ரா சுனில் குரோவர் யோகிபாபு மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது .
அதற்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூனை கேமியோ ரோலில் நடிக்க அட்லி அணுகியதாகவும், ஆனால் அல்லு அர்ஜுன் நேரமில்லை என்று கூறி விட்டதாகவும் கூறபடுகிறது. இதையடுத்து ஜவான் திரைப்படத்தில் ராம்சரண் சாமி அருள் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் 5 செகண்ட் காட்சிகள் இணையதளத்தில் தற்போது லீக்காகி உள்ளது. இதையடுத்து அந்த படக்குழுவினர்கள் தற்பொழுது அந்த காட்சி இணையதளத்தில் இருந்து நீக்கி வருகிறார்கள்.
அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் இந்த ஐந்து செகண்ட் காட்சி அருமையாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள் இன்னும் வெளிவராத இந்தப் படத்தின் காட்சிகள் லீக் ஆகியிருப்பது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோல பல சுவாரசிய சினிமா செய்திகளை தொடர்ந்தும் பார்க்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!