Connect with us

8 வயதில் என் தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்..! – ஆனால், என் அம்மா…. – குஷ்பூ அதிர்ச்சி தகவல்..!

Kushboo, குஷ்பூ

Actress | நடிகைகள்

8 வயதில் என் தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்..! – ஆனால், என் அம்மா…. – குஷ்பூ அதிர்ச்சி தகவல்..!

நடிகை குஷ்பூ சினிமா மற்றும் அரசியல் இரண்டு தளத்திலும் பிசியாக பயணித்து வரக்கூடிய ஒரு நடிகை சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை குஷ்பூ தன்னுடைய சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த அக்கிரமங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தால் அதன் பிறகு காங்கிரஸில் இணைந்தார். தற்போது பாஜகவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கும் நடிகை குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய அவர் தன்னுடைய மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அதாவது எட்டு வயதிலேயே தன்னுடைய தந்தையால் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ. இது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் ஒரு குழந்தை தன்னுடைய சிறுவயதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவாக மாறிவிடும் என்று நான் நம்புகிறேன்.

பொண்ணோ அல்லது பையனோ என்பதில் பிரச்சனை இல்லை என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை தான் அமைந்தது. என்னை என்னுடைய தந்தை பாலியல் ரீதியாக சீண்டினார்.

ஆனால் என்னுடைய அம்மாவால் அதனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு சூழலில் இருந்தார். மனைவியை அடிப்பதும் குழந்தைகளை அடிப்பதும் தன்னுடைய மகளை பாலியல் ரீதியாக உஸ்யோகம் செய்வதும் தன்னுடைய பிறப்புரிமை என்று நினைத்துக் கொண்டிருந்தவர் என்னுடைய தந்தை.

எனக்கு 8 வயதாகும் போதிலிருந்தே என்னை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்ய தொடங்கினார். ஆனால் எனக்கு 15 வயதான பிறகு தான் அவருக்கு எதிராக பேசும் சக்தி எனக்கு கிடைத்தது. அப்போதுதான் துணிச்சல் எனக்கு வந்தது.

நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. எங்கு ஏதாவது சொன்னால் குடும்ப உறுப்பினர்களை அவர் ஏதாவது செய்து விடுவாரோ..? என்ற அச்சமும் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகள் நான் அமைதியாக இருந்தேன்.

நான் இதை சொன்னால் என் அம்மா இதனை நம்புவாரா என்ற அச்சமும் எனக்கு இருந்தது. என்னிடம் தந்தை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். ஆனால் என் அம்மா இதனை நம்புவாரா..? என்ற பயம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் என்னுடைய தந்தை எது செய்தாலும்.. கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையில் தான் என்னுடைய அம்மா இருந்தார். எனவே எனக்கு 15 வயதாகும்போது இனியும் இவர்களுடன் தங்க முடியாது என்று முடிவு செய்தேன்.

அவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 16 வயது கூட முடிவடையவில்லை. அவர் எங்களை விட்டு சென்று விட்டார். அப்போது எங்களிடம் எதுவுமே கிடையாது. அடுத்தவேளை உணவுக்காக நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம்.

என்னுடைய குழந்தை பருவம் மிகக் கடினமானதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது பல்வேறு பிரச்சனைகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் வாழ்க்கையில் துணிச்சலாக போராட வேண்டும் என்ற மனப்பக்குவம் எனக்கு கிடைத்தது என்று பேசி இருக்கிறார் நடிகை குஷ்பூ.

இவருடைய இந்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா..? என்று அதிர்ச்சியில் ஆழ்ந்து  போயிருக்கின்றனர் ரசிகர்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top