Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அட்லி சம்பளம் – கப்சிப் ஆன முன்னணி நடிகர்..! – இத்தனை கோடியா கேட்பது..?

atlee allu arjun

Actress | நடிகைகள்

அட்லி சம்பளம் – கப்சிப் ஆன முன்னணி நடிகர்..! – இத்தனை கோடியா கேட்பது..?

இயக்குனர் அட்லி ஒரு படத்தை இயக்க கேட்ட சம்பளத்தை பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கப்சிப் என ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரே தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய படம் என்றால் வெகு சில படங்கள் தான் அந்த படங்களின் பட்டியலில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படமும் ஒன்று.

குறும்படங்கள் இயக்கி வந்த அட்லி ராஜா ராணி என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இவர் மீது காப்பிகேட் இயக்குனர் என்ற விமர்சனம் இருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாகவே இருந்துள்ளன.

atlee allu arjun

இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், தெறி, பிகில் என அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன என்றால் அது மிகையாகாது.

அட்லி விமர்சித்த ரசிகர்கள் கூட சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை பார்த்துவிட்டு அட்லியின் பெருமையை உணர்ந்துள்ளனர் என்பது தான் உண்மை.

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் ஃபேவரைட் இயக்குனராக இருக்கும் அட்லி தற்போது ஷாருக் கானை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகின்றார் லயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

atlee allu arjun

நடிகர் அல்லு அர்ஜுன் அட்லியை அழைத்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசியுள்ளார். ஆனால் இயக்குனர் அட்லி தனக்கு சம்பளமாக 35 கோடி ரூபாய் கொடுத்தால் உங்கள் படத்தை நான் இயக்குகிறேன் என்று கூறவே ஷாக்கான அல்லு அர்ஜுன் வாய்ப்பே இல்லை என்று சொல்லி அவரை அனுப்பி உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top