Connect with us

“20 பேர் முன்னாடி.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..” – சிலிர்க்கும் நடிகை பிரிகிடா சாகா..!

Brigida Saga, பிரிகிடா சாகா

Actress | நடிகைகள்

“20 பேர் முன்னாடி.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..” – சிலிர்க்கும் நடிகை பிரிகிடா சாகா..!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்திருந்தார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் படப்பிடிப்பு தளத்தில் 20 பேர் முன்னால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் கூறியதாவது, அந்த காட்சியில் நான் உடை அணியாமல் நடிக்கவில்லை. உடலோடு ஒட்டிய எலாஸ்டிக் போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டுதான் நடித்திருந்தேன்.

அந்த உடையை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால் உடையே அணியாமல் இருப்பது போலத்தான் தோன்றும். இருந்தாலும் கூட 20 பேருக்கு முன்னால் அப்படி நடிப்பது எனக்கு ஒரு விதமான நெருடலை கொடுத்தது.

ஆனால் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் அந்த படத்தின் இயக்குனராக அந்த காட்சியை நான் பார்த்தேன். அதனால் படத்திற்கு முக்கியமான காட்சியை படத்தின் கதைக்கு வலு சேர்க்கக்கூடிய காட்சி என்பதால் அதில் நான் துணிந்து நடித்தேன் என்று பேசியிருக்கிறார்.

இந்த படம் வெளியான போது இந்த படத்தை விடவும் இவர் இப்படி நடித்திருந்த இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாக பரவியது. இவர் மட்டும் இல்லாமல் கூடவே பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் என்பவரும் மேலாடையை துறந்து நடித்திருந்தார்.

இதுவும் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் குறித்து சில கொச்சையான விஷயங்களை youtube சேனல் ஒன்றில் பேசியிருந்தார்.

இதனால் இவர்கள் இருவரும் நேரில் எதேர்ச்சியாக சந்தித்தபோது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை பிரிகிடா சாகா 20 பேருக்கு முன்னால் இப்படி உடம்பில் ஆடை இன்றி நடித்தது குறித்து பேசி இருப்பது ரசிகர்களை மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் முதன்முறையாக தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் அளவுக்கு படு சூடான கிளாமரான டாப்ஸ் அணிந்து கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், இரவின் நிழல் படத்தில் நடித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் நடிகை பிரிகிடா சாகா-வின் இந்த பேச்சு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top