Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அக்கா… அக்கான்னு கூப்டாங்க.. ஆனா, போனதுக்கு அப்புறம்… – நடிகை ஷர்மிளா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

charmila

Actress | நடிகைகள்

அக்கா… அக்கான்னு கூப்டாங்க.. ஆனா, போனதுக்கு அப்புறம்… – நடிகை ஷர்மிளா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

தன்னுடைய ஐந்து வயதில் இருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை ஷர்மிளா. மலையாளத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவரை தமிழிலும் சில படங்களில் பார்த்திருப்பீர்கள்.

80ஸ்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மருத்துவமனையை செலவுக்கு கூட காசு இல்லாமல் குழந்தைகளின் பள்ளிக் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் திண்டாடிய காலங்களை எல்லாம் சந்தித்துள்ளார் என்றால் நீங்கள் நம்புவீர்களா..?

ஆனால் ஆடம்பர வாழ்க்கையால் தன்னுடைய அத்தியாவசிய தேவைகளை தொலைத்துவிட்டு தற்பொழுது ஏழ்மையில் வாடக்கூடிய ஒரு நடிகை தான் நடிகை ஷர்மிளா.

charmila

சுமார் 80 படங்களில் நடித்துள்ள இவர் காபுல்வாலா என்ற மலையாளத்தில் வெளியான பல  திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் யார் என்று சட்டென அடையாளம் தெரிய வேண்டும் என்றால் சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருந்தாரே அவரேதான் இந்த ஷர்மிளா.

பட வாய்ப்பு வேணுமா படு..

charmila

சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் நடிகர் சர்மிளா பட வாய்ப்புக்காக தன்னைவிட இளம் வயது உடைய தயாரிப்பாளர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று கூறி அதிர வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என போன் செய்தனர். அக்கா ஒருபடம் நீங்க நடிக்கணும் வாங்ககா பேசிக்கலாம் என்று அழைத்தனர்.

charmila

நானும் சென்றேன் சென்றால் அங்கு என்னை விட வயதில் குறைவான மூன்று தயரிப்பாளர்கள் இருந்தனர். என்னுடைய மகன் வயது அவர்களுக்கு இருக்கும். படம் குறித்து விவரங்களை என்னிடம் பகிர்ந்தனர்.

நானும் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் மூன்று பேரிடமும் நீங்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். அட்ஜஸ்ட் செய்தாள் உடனடியாக பட வாய்ப்பு உங்களுக்கு உறுதிசெய்யப்படும் அதற்கான முன் பணமும் வழங்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

படுக்கைக்கு அழைத்த மகன் வயது நபர்கள்..

charmila

என்னை விட கிட்டத்தட்ட 20, 25 வயது குறைவான நபர்கள் அவர்களின் வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அக்கா அக்கா என்று வாய் நிறைய அழைத்துவிட்டு இப்படி வெளிப்படையாக படுக்கைக்கு அளைக்கிறார்களே.. என்று அதிர்ச்சி ஆகி போனேன்.

அதன் பிறகு இங்க பாருங்கப்பா, உங்க வயசுல எனக்கு ஒரு பையன் இருக்கான் இப்ப வந்து என்கிட்ட இப்படி கேட்கிறீர்களே..? உங்களுக்கே சரியா படுதா..? என்று கேள்வி கேட்டேன். ஆனால், அதெல்லாம் தெரியும் அக்கா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்றார்கள். இதனால், பட வாய்ப்பே வேண்டாம் என நான் திரும்பி வந்து விட்டேன்.

அப்போலாம் சூசகமாக கேப்பாங்க..

charmila

சினிமாவில் முன்பெல்லாம் இப்படியான விஷயங்கள் நடக்கும். ஆனால் அதனை சூசகமாக யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக தான் கேட்பார்கள். ஒரு நடிகையின் மீது ஆசை கொண்டால் அவரிடம் நேரடியாக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கின்றது.

ஆனால் முன்பெல்லாம் இப்படி வெளிப்படையாக யாரும் கேட்டது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்காவது நடக்கும் அதுவும் காதும் காதும் வைத்தது போல தான் நடக்கும்.

ஆனால் சமீபகாலமாக இப்படி வெளிப்படையாக கேட்கும் நபர்கள் வந்து விட்டனர். இது சினிமாவிற்கு நல்லதல்ல. அதிலும் சில நடிகைகள் மீது ஆசை கொண்டு அவர்கள் ஒத்துவரவில்லை என்றால் அவர்களை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அதன் வழியாக அந்த நடிகையை அனுபவித்துவிட்டு எஸ்கேப் ஆன பிரபலங்களும் உண்டு.

charmila

ஆனால் சமீபகாலமாக இப்படி வெளிப்படையாக தன்னைவிட வயதில் மூத்த நடிகை என்று கூட பார்க்காமல் படுக்கைக்கு அழைக்கும் நபர்களை கண்டு நான் அஞ்சுகிறேன்.. என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ஷர்மிளா.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top