Actress | நடிகைகள்
நீச்சல் உடையில்.. “காலா” பட ஹீரோயின் ஈஸ்வரி ராவ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகை ஈஸ்வரி ராவ் கடந்த 1990ஆம் ஆண்டு கவிதை அலைகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் – ஈஸ்வரி ராவ் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஈஸ்வரி ராவ். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்றால் வெள்ளையாக புசுபுசுவென இருக்க வேண்டும்.
ஆனால் நானோ கருப்பாக ஒல்லியாக இருக்கிறேன் என்பதற்காக நடிக்கும் திறமை இருந்தும் என்னால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. எனக்கு பட வாய்புகள் மறுக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் என்னால் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் இதுதான். கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை.
ஆசைப்பட்டபடி சினிமா வாழ்க்கை தான் அமையவில்லை என்று சீரியலுக்கு வந்து அதன்பிறகு சரவணா, சுள்ளான் போன்ற படங்களில் நடித்தேன். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன்.
ஆனால் காலா படம் தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் கிட்டதட்ட 2 மாதம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அதன் பிறகு மூன்றாவது மாதம் ரஜினிக்கு ஜோடியாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார் அதன் பிறகுதான் நான் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது உறுதியானது என்று கூறியுள்ளார்.
என்னதான் கருப்பாக ஒல்லியாக இருந்தாலும் தன்னுடைய பதின்ம வயதில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவும் தயங்கவில்லை நடிகை ஈஸ்வரி ராவ். அந்த வகையில் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்வா இது..? என்று கண்களை தேய்த்து பார்த்து வருகின்றனர்.
--- Advertisement ---
