Connect with us

சேலையில் சொக்க வைக்கும் வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன் புகைப்படங்கள் இங்கே

Samyuktha Menon, vaathi heroine

Actress | நடிகைகள்

சேலையில் சொக்க வைக்கும் வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன் புகைப்படங்கள் இங்கே

 

கேரளாவில் பிறந்து வளர்ந்த சம்யுக்தா மேனன் பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய பாத்திரம் சிறியதாக இருந்தாலும் அவருடைய நடிப்பு கனகச்சிதமாக இருந்தது மேலும் பல பாராட்டு பெற்றது.

இவர்  செப்டம்பர் 11, 1995 அன்று கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தார். சம்யுக்தா ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து பாலக்காட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார்.சம்யுக்தாவுக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் மாடலிங்கில் ஆர்வம் அதிகம். படிப்பை முடித்த பிறகு, ஒரு மாடலிங்காக பொழுதுபோக்கு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு வெளியான தீவண்டி திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் அவர் தோவினோ தாமஸ்க்கு  ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் சம்யுக்தாவின் நடிப்பு இதில் பெரிதும் பாராட்டப்பட்டது. திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சம்யுக்த மேனன் லில்லி, பென்குயின், கல்கி, போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் நடித்தார்.

இந்த படங்களில் அவரது நடிப்பு மிகவும் அருமையாகவும் அவரது சினிமா வாழ்க்கையில் நல்ல நிலையை ஏற்படுத்தவும் உதவியது. சம்யுக்தா நடிப்பு தவிர சமூக ஆர்வலராகவும் பாலின சமத்துவம் மற்றும் மன நல விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார்.

இந்த பிரச்சனைகளுக்காக  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெண்களுக்கு ஒரு நடிகையாக தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார். சினிமாவில் என்னதான் சவால்கள் இருந்தாலும் சம்யுக்தா தனது நடிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து கடினமாக உழைத்து தன்னுடைய இடத்தை நிலை நிறுத்தியுள்ளார்.

சம்யுக்தா மேனன் இன்று நடிகையாக மட்டுமில்லாமல் பல இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். இவர் தற்போது தமிழில் தனுஷ் நடித்த வார்த்தை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 27 வயதாகும் சம்யுக்தா தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top