Connect with us

குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேற இதுதான் காரணம்..! செஃப் தாமு பேட்டி..!

cook with comali, manimegalai

Actress | நடிகைகள்

குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேற இதுதான் காரணம்..! செஃப் தாமு பேட்டி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் குக்கிங் ரியாலிட்டி ஷோ தான் இந்த குக் வித் கோமாளி . இது இப்போது நான்கு சீசன் களாக நடந்து கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியை பிரபல செப், செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ரக்சன் இதை தொகுத்து வழங்குகிறார்.

முதல் இரண்டு சீசன்களில் குக் வித் கோமாளி அனைத்து ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு காரணம் இதில் கோமாளியாக நடித்த புகழ் சிவாங்கி மணிமேகலை போன்றவர்கள் தான்.இவ்வாறு இருக்க இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மணிமேகலை திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில் இதேபோல் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். அதற்கு காரணம் அந்த நேரத்தில் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் படத்தில் நடிப்பதில் பிஸியாக இருந்தார் மீண்டும் இந்த சீசனில் குக் வித் கோமாளியில் மீண்டும் இணைந்துவிட்டார்.

அதுபோல பாலா கடந்த சீசன் முழுவதும் குக் வித் கோமாளியை தன்னுடைய காமெடியால் கலகலப்பாக மாற்றிஇருந்தார்.  இந்த முறை படபிடிப்பில் பிசியாகி விட்டதால் இந்த சீசனில் அவரால் வர முடியவில்லை.

இந்த நிலையில்தான் மணிமேகலை கடந்த வாரம் நடந்த எபிசோடில் நானே வருவேன் கெட்டப்பில் வந்து இனி கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சிலர் குறிப்பாக அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும், திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் இன்னும் சிலர் விஜய் டிவியில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை தான் எதனால் வெளியேறினேன் என்று இதுகுறித்து பேசாத மணிமேகலை கூறவில்லை.

பிற போட்டியாளர்களோ  இது அவருடைய சுய விருப்பம் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் செப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மணிமேகலை விலகியது குறித்து பேசியுள்ளார். அதில் குக் வித் கோமாளி பொருத்தவரை மணிமேகலை காமெடியை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் என்றும் அவர் என்னுடைய மகள் போன்றவர் என்றும் கூறியுள்ளார்.

அவர் வெளியே வெளியேறியது சற்று வருத்தத்தை தந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட முடிவு. ஏற்கனவே தொகுப்பாளினியாக உள்ளவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவரது எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் வெற்றியடைய வாழ்த்து வதாகவும் செப் தாமு கூறினார்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top