Actress | நடிகைகள்
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஜீவிதா-வா இது..? – அசந்து போன ரசிகர்கள்..!
சின்னத்திரையில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் நடிகை ஜீவிதா. மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் கூட அதனை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போலவே நடித்து அசத்தும் அசாத்திய திறமை கொண்டவர் நடிகை ஜீவிதா என்று கூறலாம் சீரியல் மட்டும் இல்லாமல் சமீப காலமாக சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. சமீபத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி அவர் கூறியதாவது மீடியாவில் இருக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அட்ஜஸ்ட் செய்ய சொல்கிறார்கள் அதுபோலத்தான் நாமும் அவர்கள்.
அவங்க கொஞ்சம் லோ லெவல்.. நாம கொஞ்சம் ஹை லெவல் அவ்வளவுதான் வித்தியாசம். அட்ஜஸ்ட்மென்ட் என்னவோ ஒன்றுதான். அவர்கள் பெண்கள்.. நடிகைகள் என்றாலே அதற்காகத்தான் என்று நினைப்பார்களோ..? என்னவோ தெரியவில்லை.. அவர்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகள் இருக்காங்களா என்று கூட தெரியவில்லை.
ஒரு பெண் தானே அவர்களுக்கும் அம்மாவாக இருக்கிறார். இன்னும் பச்சை பச்சையாக நான் சொல்லி விடுவேன். ஏனென்றால் நான் மீடியாவில் இருப்பதால் நான் அமைதியாக இருக்கிறேன்.
இல்லையென்றால் யாராக இருந்தாலும் என் முன் வந்து கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய மேனேஜர் மூலமாக நிறைய அழைப்புகள் எனக்கு வரும் சமீபத்தில் கூட ஒரு மேனேஜர் என்னிடம் சொல்கிறார்.
நான் நினைத்தால் தான் உனக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் இல்லையென்றால். உனக்கு படத்திற்கு உள்ளேயே போக முடியாது. நான் சரி என்று கூறினால் பட வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறுகிறார்கள்.
நான் அடிக்க வந்த காலத்தில் கூட இவ்வளவு தொல்லைகள் இருந்து கிடையாது. ஆனால் இப்போது அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் ஏன் தான் நடிக்க வந்தோமோ என்று கூட தோன்றியதுண்டு.
இப்படியான அட்ஜஸ்ட்மென்ட் அழைப்புகள் நிறைய எனக்கு வந்திருக்கிறது. அதனை நான் தவிர்ப்பதால் பல பட வாய்ப்புகள் தவற விட்டு இருக்கிறேன் என்பது உண்மை என்று பேசியிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கும் அவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது.
