Actress | நடிகைகள்
பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? – கயல் ஆனந்தி-யை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!
பிரபல நடிகை கயல் ஆனந்தி பட வாய்ப்புக்காக வேண்டி செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இயக்குனர் பிரபு சோலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.
இந்த படத்தின் வெற்றி இவருடைய பெயருக்கு முன்னாள் அந்த படத்தின் பெயரை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. தான் நடித்த கயல் திரைப்படம் வெற்றி பெற்றதால் தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார் அம்மணி.
ரசிகர்களும் இவரை கயல் ஆனந்தி என்றே அடையாளம் காண்கின்றனர். இடையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு குழந்தை குடும்பம் என இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை கயல் ஆனந்தி தற்பொழுது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு நான் நடிக்க வந்திருக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் டைட்டானிக் என்ற தமிழ் திரைப்படம் தான்.
இந்த படத்தின் கதையை கேட்டதும் நிச்சயமாக இந்த படத்தை நாம் தவறவிடக்கூடாது நடிக்க வேண்டும் என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக இந்த திரைப்படம் இருக்கும் என நம்பினேன். அதேபோல இந்த படமும் இருந்தது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான யுகி என்ற திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கயல் ஆனந்தி சில அதிர்ச்சி தரும் விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது யுகி திரைப்படத்தில் நான் நடிக்கும் போது கர்ப்பமாக இருந்தேன். இதனை கூறினால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யாரிடமும் கூறவில்லை என கூறியிருக்கிறார்.
இதனை அறிந்து ரசிகர்கள் பட வாய்ப்புக்காக தான் கர்ப்பமாக இருப்பதை கூடவா மறைப்பீர்கள்..? விசித்திரமாக இருக்கிறதே..? என்று அதிர்ச்சியில் உடைந்து இருக்கிறார்கள். மேலும் பட வாய்ப்புக்காக இப்படியுமா செய்வீர்கள்..? என்று கேள்விகளையும் எழுப்பி வருகிறார்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!