Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

யூ-ட்யூப் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் – கனவுகளை நொறுக்கிட்டார் என சோகம்..!

youtube actress

Actress | நடிகைகள்

யூ-ட்யூப் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் – கனவுகளை நொறுக்கிட்டார் என சோகம்..!

யூடியுப் மூலம் பிரபலமாகி சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஒருவரை முன்னணி நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சமாச்சாரம் வெளியாகி கோடம்பாக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக, யூடியூப் சீரியல்களில் நடித்தும், குறும்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகைகள் சினிமாவிலும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் யூடியூபில் ஹிட்டடித்த வெப்சீரிஸ் ஒன்றில் நடித்த “ச” நடிகை சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்துள்ளார்.

அவருக்கு பிரபல நடிகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தனக்கு பிடித்த நடிகர் தன்னை தொலைபேசியில் அழைத்து பட வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளார் என்று பெருமைப்பட்ட அந்த நடிகைக்கு தொலைபேசி உரையாடலின் கடைசியில் காத்திருந்தது அதிர்ச்சி.

நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் அந்த நடிகர் மீது வைத்து இருந்தேன். ஆனால் அவர் இப்படி கேட்பார் என்று நான் ஒரு நிமிடம் கூட யோசித்து கூட பார்த்தது கிடையாது. அவர் நடிக்கும் புதிய படம் குறித்து அதில் என்னை நடிக்க வைப்பது குறித்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பேசிய அவர் இறுதியில் என்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வா என்று அழைத்தார் பதறிப்போய் உடனே போனை கட் செய்து விட்டேன்.

திரையில் நான் பார்த்து வியந்த நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இப்படி என்னிடம் நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.என்னுடைய கனவுகளை ஒரு நிமிடத்தில் நொறுக்கி விட்டார்.

அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாமே ஒரே ஒரு போன் காலில் சிதைந்து போய் விட்டது என்று புலம்பி தீர்த்துள்ளார்.

யூட்யூப் நடிகையை படுக்கைக்கு அழைத்த அந்த நடிகர் யார் என்றால் தற்போது மனைவியை பிரிந்து தனிமையில் வாடும் பிரபல நடிகர் தான். மீ டூ போன்ற பல விஷயங்கள் நடந்தும் சில சினிமா நடிகர்கள் திருந்துவதாக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top