Connect with us

“நிறைய பெண்கள் இருக்காங்க… ஒரே நாளில் 12 லட்சம்..” – வைரலாகும் வீடியோ..! கொந்தளிக்கும் பிரபல நடிகை..!

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

Actress | நடிகைகள்

“நிறைய பெண்கள் இருக்காங்க… ஒரே நாளில் 12 லட்சம்..” – வைரலாகும் வீடியோ..! கொந்தளிக்கும் பிரபல நடிகை..!

பிரபல நடிகை கஸ்தூரி Youtube நெறியாளர்கள் பலரும் மப்பும் மந்தாரமும் ஆக காட்சி அளிக்கும் வீடியோ காட்சிகள்-ஐ பார்த்து விட்டு தன்னுடைய வேதனையை பதிவிட்டுள்ளார். மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட இந்த வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த காட்சிகள் யூடியூபர் மதன் என்பவரால் வெளியேற்றப்பட்டு இருக்கிறது.

பத்திரிக்கையாளரான மதன் ரவிச்சந்திரன் சக பத்திரிகையாளர்கள் மற்றும் Youtube நெறியாளர்களின் உண்மை முகம் என்ன என்பதை ஒரே ஒரு வீடியோ காட்சியின் மூலம் வெளியிட்டு ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறார்.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

ஒரே ஒரு வீடியோவால் பிரபல அரசியல்வாதி கே டி ராகவன் என்பவருடைய அரசியல் சகாப்தமே முடிந்து போய்விட்டது. அவர் மீண்டும் எப்போது எழுந்து வருவார் என்ற சந்தேகம் இருக்கிறது.

மீண்டும் வருவாரா என்பதே சந்தேகம்தான் என்ற நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் சில காலம் தலைமறைவானார். ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்து நிலையில் தற்போது மார்ஸ் தமிழ் என்ற Youtube சேனலை தொடங்கி அதில் சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ இணைய வட்டாரத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. இவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் அரசியல் அரங்கிலும் இணையவாசிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

யூடியூபர்கள் ஐயப்பன் ராமசாமி, முக்தார், மாதேஷ் உள்ளிட்ட பிரபலமான யூடியூப் அவர்கள் அரசியல் கட்சியிடம் இருந்து பணம் மற்றும் தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பெறும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இத்தனை இத்தனை நாட்களாக நேர்மையான நெறியாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த பலரும் இப்படியான வீடியோவில் சிக்கி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் பெண்கள் முன்னேற்றம் சம உரிமை என விதவிதமாக முற்போக்கு சிந்தனைகளை பேசி வரும் இவர்கள்.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

எனக்கு இன்ஸ்டாகிராமில் நிறைய பெண்கள் பாலோவர்களாக இருக்கிறார்கள். அந்த ஐடியை என்னுடைய அட்மினிடம் கொடுத்தால் அந்த பெண்களை அவன் சாப்பிட்டு போயிடுவான் என்று நா கூசாமல் மோசமாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும், வைர மோதிரங்கள், கட்டு கட்டாக பணம், உயர்தர மதுபான வகைகள் ஆகியவற்றை பரிசாக பெற்றுக் கொள்ளும் இந்த பத்திரிகையாளர்களின் இந்த வீடியோ காட்சிகள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால், இதுவரை இவர்கள் எதற்காக இந்த பணத்தை வாங்கினார்கள்..? யார் இவர்களுக்கு இந்த பணத்தை கொடுத்தார்கள்..? என்ற ஒரு கேள்வி பொது வெளியில் இருந்திருக்கிறது.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

இது குறித்த விடை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த அரசியல் மற்றும் இணையவாசிகளின் கவனமும் இந்த பிரச்சினையை நோக்கித்தான் இருக்கிறது.

ஆனால், இப்படி சிக்கி இருக்கும் யூட்ரூபர்களின் சமூக வலைதள பக்கங்கள் மயான அமைதியாக காட்சியளிக்கிறது. எந்த ஒரு சர்ச்சையாக இருந்தாலும் முண்டியடித்துக் கொண்டு வந்து..வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. மீசையை முறுக்கிய படி பதில் கொடுக்கும் யூட்யூபர்கள் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள்.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது நாள் முழுதும் வசனம் பேசி மழையிலும் வெயிலிலும் ஓடி ஆடி நடித்து முழுசா 50,000 ஐ பார்க்க முடியவில்லை.

ஆனால் இவர்கள் உட்கார்ந்து இடத்தில் 6 லட்சம் 15 லட்சம் என்று கூறுகிறார்கள். என்ன என்று புரியவில்லை. அரசியல்வாதிகள் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் போலீஸ் மாமூல் போன்ற விஷயங்களை பழகிக் கொண்டு விட்டோம் நடிகைகளை அவதூறு பேசும் மஞ்சள் பத்திரிகைகளுக்கு இடம் கொடுத்து விட்டோம்.

Madan Sting Operation, பிரபல நடிகை, மதன் ரவிச்சந்திரன்

எனினும் நேர்மையானவர்கள் என்று நம்பியவர்கள் விலை போனார்கள் என தெரிந்தால் வலிக்கத்தான் செய்கிறது. என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top