Connect with us

ஏமாற்றத்தை கொடுத்த பொன்னியின் செல்வன் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Ponniyin Selvan

Actress | நடிகைகள்

ஏமாற்றத்தை கொடுத்த பொன்னியின் செல்வன் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். இதில் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது . இந்த நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை என உச்ச நட்சத்திரங்கள் முயற்சி செய்தார்கள்

ஆனால் இறுதியாக இந்தப் படத்தை மணி ரத்தினதாலேயே  எடுக்க முடிந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்க இந்தப்படத்தில் சியான் விக்ரம், திரிஷா ,ஜெயம்ரவி ,ஐஸ்வர்யாராய், கார்த்தி ,ஜெயராம் என ஒரு சினிமா பட்டாளமே நடித்திருந்தது.

Ponniyin Selvan

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று உலகெங்கிலும் veliyanathu அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடியது.

முதல் பாகம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் இரண்டாம் பாகம் ஏற்கனவே உருவாகியிருந்த சூழலில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இப்பொழுது பொன்னியின் செல்வன் பகுதி இரண்டில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது .

இந்த நிலையில் கனடா திரைப்படவிழாவில் பொன்னியின் செல்வன் நிறைய விருதுகளை வென்று இருந்தது. இன்று ஹாங்காங்கில் நடைபெற்ற 16 ஆவது ஆசிய திரைப்பட விழாவிலும் போட்டியிட்டது .

Ponniyin Selvan

சிறந்த படம் சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த எடிட்டிங் சிறந்த கலை வடிவமைப்பு சிறந்த ஆடை வடிவமைப்பு என ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆனது இந்த படம் குறைந்தபட்சம் இரண்டு பிரிவுகளில் ஆவது விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் . ஒரு விருதை கூட இல்லாதது ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

தற்போது மணி ரத்னம் இந்த படத்தின் 2 பகுதி ரிலீஸ் வேலைகளில் இறங்கியுள்ளார். இதை முடித்திவிட்டு அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து கமல்ஹாசன் 234 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top