Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – அவருடைய புதிய பெயர் இது தானாம்..!

Ranjitha, ரஞ்சிதா

Actress | நடிகைகள்

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – அவருடைய புதிய பெயர் இது தானாம்..!

தற்பொழுது 47 வயதாகும் நடிகை ரஞ்சிதா தன்னுடைய 37-வது வயதில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபல சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று சந்நியாசி ஆனார். இவர் சன்னியாசி ஆகி தற்பொழுது பத்து வருடங்கள் ஆகின்றது.

Ranjitha, ரஞ்சிதா

இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீவள்ளி என்பதாகும். திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஞ்சிதா என்று தன்னுடைய பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். கடந்த 2000ஆம் ஆண்டு ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா.

இந்நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு 2007ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு சாமியார் நித்யானந்தாவின் சிஷ்யையாக மாறிய இவர் அவருடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய மடத்திலேயே தங்கி சேவை செய்து வந்தார்.

Ranjitha, ரஞ்சிதா

ஆனால் அந்த மடத்தில் தங்கி என்ன சேவை செய்தார் என்ற ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே கிடுகிடுக்க வைத்தது. அது குறித்து விரிவாக பேச வேண்டிய தேவையில்லை.

தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தாவுடன் இருந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Ranjitha, ரஞ்சிதா

அதன்பிறகு இவர் மீதும் சாமியார் நித்யானந்தா மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டன. இவர்கள் மீதான வழக்கு தற்போது நிலுவையில் தான் இருக்கின்றது. முடிந்தபாடில்லை. தேடப்படும் குற்றவாளி என்ற ரேஞ்சுக்கு இருக்கும் நித்தியானந்தா தற்பொழுது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருக்கிறது.

தனியாக ஒரு தீவை வாங்கி அதனை ஒரு நாடாக உருவாக்கி அதற்கென நாணயங்கள் உருவாக்கி அங்கேயே வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகை ரஞ்சிதா தற்போது தனியாக மடம் ஒன்றில் ஒன்றை தொடங்கி தியான முகாம்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Ranjitha, ரஞ்சிதா

முன்னதாக நித்யானந்தாவிடம் முறைப்படி சன்யாசம் பெற விரும்பிய ரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் அதிகாலை நேரத்தில் நீராடி அதன் பிறகு ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு காவி உடை உடுத்திக்கொண்டு நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்.

அப்பொழுது ஆசிரம விதிமுறைகளையும் ஆசிரமத்திற்கு சந்நியாசிக்கு மான உறவு குறித்த ஒப்பந்தங்களையும் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார் அப்பொழுது நடிகை ரஞ்சிதாவின் பெயரும் மாற்றப்பட்டது.

Ranjitha, ரஞ்சிதா

அந்த வகையில் இவருடைய பெயர் மா ஆனந்தமாயி என்று மாற்றப்பட்டது. இனிமேல் நடிகை ரஞ்சிதா மா ஆனந்தமாயி என்று அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர். சமீபத்தில் சாமியார் நித்யானந்தா கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்காக மருத்துவ வசதி இல்லாமல் மேலும் மேலும் அவருடைய உடல்நிலை மோசமாகி கொண்டு இருந்தது எனவும் தகவல்கள் தெரிவித்தன.

மேலும் தனக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வேண்டும் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் சாமியார் நித்யானந்தா கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவின் பெயர் மா ஆனந்தமாஇ என்பதிலிருந்து மீண்டும் மாற்றப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Ranjitha, ரஞ்சிதா

அதன்படி நடிகை ரஞ்சிதா மா நித்திய ஆனந்தமாயி என்று அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நடிகை ரஞ்சிதாவிற்கு தீட்சை வழங்கியது குறித்து பல்வேறு மடாதிபதிகள் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் நித்யானந்தா அவருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்தன. அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top