Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மீனா கணவர் மரணத்துக்கு இது தான் காரணமா..? – புதுசா இருக்கே..! – உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Death reson, Meena, Meena Husband, மரணதிற்க்கான காரணம், மீனாவின் கணவர்

Actress | நடிகைகள்

மீனா கணவர் மரணத்துக்கு இது தான் காரணமா..? – புதுசா இருக்கே..! – உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகை மீனாவின் கணவர் நேற்று (28-06-20222) அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவருடைய உயிர் பிரிந்தது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவை சேர்ந்தவர். கடந்த 2009ஆம் ஆண்டு மீனாவும் வித்யாசாகரின் திருமணம் செய்துகொண்டனர் இவர்களுக்கு நைநிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

Death reson, Meena, Meena Husband, மரணதிற்க்கான காரணம், மீனாவின் கணவர்

நடிகர் விஜயின் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருப்பார் நைநிகா. இந்நிலையில் வித்யாசாகரின் இந்த திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்று அவருடைய உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பா..?

அதாவது கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பால்தான் வித்யாசாகர் இறந்து விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், அது உண்மை அல்ல என்ற விஷயம் தெரிய வருகின்றது.

Death reson, Meena, Meena Husband, மரணதிற்க்கான காரணம், மீனாவின் கணவர்

வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரலில் பிரச்சினை இருந்தது எனவும் இரண்டு பக்க நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் அவர் பிழைக்க முடியும் என்ற நிலையில் இருந்தார் எனவும் கூறினார்கள்.

புறவால் ஏற்பட்ட மரணம்..?

மேலும், இவருக்கு இந்த நுரையீரல் நோய் வந்ததற்கு காரணம், புறாக்களின் எச்சம் கலந்த காற்றினை சுவாசித்ததால் தான் என்று திடுக்கிடும் தகவல் ஒன்றையும் வெளியிட்டனர்.

அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிக்கும் போது இப்படியான நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கருகில் நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதாக தெரிகின்றது.

Death reson, Meena, Meena Husband, மரணதிற்க்கான காரணம், மீனாவின் கணவர்

இதனால் ஏற்பட்ட நுரையீரல் அலர்ஜி வித்யாசாகரின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்று விட்டது என்று தகவல்களை கூறியுள்ளனர். இந்த விவகாரம் இணையவாசிகள் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் தேடியபோது புறாவின் எச்சத்தால் சில நேரம் கடுமையான நுரையிரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே தெரிகின்றது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-கை https://www.patientsengage.com/news-and-views/can-pigeons-cause-lung-diseases பார்க்கவும்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top