Connect with us

சமந்தா விரலில் புது மோதிரம்..! – இது தான் விஷயமாம்..!

Actress Samantha, சமந்தா

Actress | நடிகைகள்

சமந்தா விரலில் புது மோதிரம்..! – இது தான் விஷயமாம்..!

நடிகை சமந்தா தன்னுடைய விரலில் புதிய மோதிரம் ஒன்று அணிந்திருக்கிறார். தன்னுடைய புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்./ இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக அரியவகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.

மருத்துவம் ஆன்மிகம் என இரண்டு துணையுடன் இரண்டின் துணையுடனும் தன்னுடைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இடையே சமந்தாவிற்கு ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்களுடைய பிரார்த்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Actress Samantha, சமந்தா

மறுபக்கம் படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் நடிகை சமந்தா பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவை பொறுத்தவரை நடிகை நயன்தாரா திரிஷா ரேஞ்சுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா.

Actress Samantha, சமந்தா

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் களிலும் நடித்திருக்கிறார் கடந்த வருடம் தன்னுடைய ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகரமான செய்திகளை கொடுத்தார் நடிகை சமந்தா.

ஒன்று தன்னுடைய காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சினிமாவில் மின்னல் வேகத்தில் பயணித்து வந்த நடிகை சமந்தா தனக்கு அரிய வகை நோய் ஒன்று மையோசைட்டிஸ் என்ற நோய் ஒன்று தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறி ரசிகர்களை அதிர வைத்தார்.

Actress Samantha, சமந்தா

கடந்த ஏழு மாதமாக இதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடிகை சமந்தா அந்த நோயிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இதை எடுத்து கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இருந்தும் விலகி இருந்த இவர் தற்பொழுது தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சிவராத்திரி தினமான நேற்று கையில் நாக வடிவிலான மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் தன்னுடைய மனம் மற்றும் உடல் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்ற வேண்டுதலின் அடிப்படையில் நடிகை சமந்தா என்கிற மோதிரத்தை அணிந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Actress Samantha, சமந்தா

Summary in English : Actress Samantha is making headlines with her latest fashion statement – a beautiful Naga Ring. The ring, which is said to have been inspired by ancient South Indian culture, has caught the attention of many fashion enthusiasts.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top