Actress | நடிகைகள்
தனுஷை பளார் என அறைந்த செல்வ ராகவன்..! – அழுது கண்ணீர்விட்ட தனுஷ்..!
வித்தியாசமான கதை தளத்தையும் விறுவிறுப்பான திரைக்கதையும் அமைத்து நல்ல படங்களை கொடுக்க கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவருடைய தம்பி தனுஷ் இது யாருக்கும் அறிமுகம் தேவையில்லை என்று சொல்லலாம். இவ்வாறு இருக்க தற்பொழுது ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது
தனுஷ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தனுஷின் தந்தையும் கொஞ்சம் கடன் அதிகமாக இருந்த காரணத்தினால் தனுஷின் நடிகராகிவிட்டார்.
தனது சொந்த வீட்டை 40 லட்ச ரூபாய்க்கு விற்று தனுஷின் தந்தை தன் மகன் தனுஷை வைத்து படம் எடுக்க எண்ணி இருக்கிறார். அந்த படம் தான் துள்ளுவதோ இளமை இதன் இயக்குனர் செல்வராகவன்.
அந்தப் படமும் இவர்கள் நினைத்த அளவு மிகுந்த வெற்றியை பெற்றது. அதற்குப் பிறகு தனுஷை வைத்து செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் வினோத் ஆக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தனுஷ். இந்தப் படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதுவும் அந்த கதாபாத்திரம் ரொம்ப அமைதியாகவும் சாந்தமாகவும் கேட்பதற்கு சரியாக பதில் கூட சொல்லத் தெரியாத ஒரு கல்லூரி மாணவனாகவும் நடித்திருப்பார் .இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போனார்கள் . இந்த படத்தில் ஒரு சீன் வரும் அதில் நடிகை சோனியா அகர்வால் வீட்டை பார்த்ததும் தனுஷ் ஒரு ரியாக்சன் கொடுக்கவேண்டும்.
அதை படமாக்கி கொண்டிருக்கும்போது தனுஷ் செல்வராகவன் சொன்னபடி சரியாக நடிக்கவில்லையாம். இது திரும்பத் திரும்ப ரீடேக் எடுத்ததை பார்த்து செல்வராகவன் கோபப்பட்டு தனுசை மொத்த வேலையாட்கள் முன்பு வைத்து அறைந்து விட்டாராம் அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவருக்கும் இது மிகப்பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னடா இது தன் அண்ணனே தன்னை அனைவர் முன்னிலும் வைத்து மறைந்துவிட்டார் என்ற எண்ணத்தில் தனுஷ் சோகம் ஆகிவிட்டாராம். அன்று இப்படி அறை வாங்கிய தனுஷ் இன்று ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது தனுஷின் ஒரு படம் இறங்கினால் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கைதட்டி ரசிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் இதுவரை இரண்டு முறை வென்றுள்ளார். செல்வராகவனின் தனது அண்ணனாக மட்டுமில்லாமல் தன்னுடைய குருவாகவும் பார்க்கிறார்.
இதுபோல பல ஸ்வாரசிய சினிமா செய்திகளை உடனுக்குடன் தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!