Actress | நடிகைகள்
பொட்டு வைத்த வட்ட நிலா…! குழந்தையோடு இருக்கும் ஸ்ரேயா சரண் கியூட் கிளிக்…!!
தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகிகளோடு நடித்த பெருமை ஸ்ரேயாவுக்கு உண்டு.
தமிழைப் பொறுத்தவரை இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சிவாஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டதோடு வசூலையும் வாரி தந்தது.
இது போலவே சீயான் விக்ரமோடு இணைந்து கந்தசாமி படத்தில் துருதுருவென கேரக்டரில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.
பார்ப்பதற்கு வெள்ளந்தியாக இருக்கக்கூடிய இவர் பல படங்களில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வாய்ப்புக்களை பெற்ற போதே திடீர் என காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அடுத்து ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட நிலையிலும் சமூக வலைதளங்களில் அத்துமீறிய கவர்ச்சியில் புகைப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் எப்போதும் இல்லாத அளவு புதுமையான புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருக்கும் ஸ்ரேயா சரணின் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தில் குழந்தையும் கையுமாக நெற்றியில் அழகிய சிவப்பு நிற மங்களகரமான பொட்டினை அணிந்து கச்சிதமாக தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள்.
பார்ப்பதற்கு மகாலட்சுமியாகவும் குடும்ப பெண்ணாக ஜொலிக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். மேலும் இளசுகளின் மனதில் இவர் ஒரு குடும்பப் பெண் என்பதை இந்த போட்டோ உணர்த்திவிட்டதாக அவர்கள் பேசி வருவது இவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
எவ்வளவுதான் மாடர்ன் உடையில் பல வகையான போஸ்களை தந்திருந்தாலும் இதுபோன்று மங்களகரமான காட்சி தந்து இருக்கக்கூடிய புகைப்படத்தை இவர் இப்போதுதான் வெளியிடுகிறார் என்ற கேள்வியையும் எழுப்பி விட்டு இருக்கிறது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு யாரும் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இதில் பாசிட்டிவான கமெண்ட்களை தான் அதிக அளவு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
