Actress | நடிகைகள்
என்னை எண்ணலாம் செய்தார்கள் தெரியுமா..!! மொத்தத்தையும் போட்டு உடைத்த சோபிதா துலிபலா..!
2016 ஆம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.O என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபலா.
இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் ஹாட்ஸ்டாரில் ‘தி நைட் மேனேஜர்’ என்ற வெப் சீரிஸ் இல் கவர்ச்சியாக நடித்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் அவர் மாடலிங் துறையில் இதற்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வினை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் தற்போது இவர் பான் இந்தியா படங்களில் நடித்து வரும் நடிகை ஆவார். மாடலிங் துறையில் இருந்த பொழுது ராமன் ராதா 2.0 என்ற இந்தி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்ததால் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
முன்னதாக இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததால் அதில் நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.மலையாளத்தில் மூத்தேன்,குருப் போன்ற படங்கள் சோபிதாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. குறிப்பாக தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நான் மாடலாக இருந்த பொழுது நிறைய கம்பெனிகளுக்கு அடிக்கடி சென்று ஆடிஷனில் பங்கேற்று உள்ளேன். இப்பொழுது எனக்கு யாரும் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. நான் அழகாகவும் கவர்ச்சியாகவும் இல்லை என ஒரு விளம்பர நிறுவனம் என்னிடம் ஓபன் ஆக கூறியது. நீ அழகிகளின் பின்னால் நிற்க கூட தகுதி இல்லாத ஒரு பெண் என்று என்னை அசிங்கப்படுத்தினார்கள்.
அவர்கள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நான் தனியாக திரைப்படத்துறையில் போராடினேன். எனக்கு 20 வயது ஆகும் பொழுது ஒரு கம்பெனியில் ஆடிஷனுக்கு என்னை அழைத்தார்கள். அப்போது என்னை ரிஜெக்ட் செய்தார்கள். இப்பொழுது நான் பிரபலமாக இருப்பதால் அதே கம்பெனியில் அம்பாசிடராகவும் மாற்றிவிட்டார்கள். அது மட்டுமல்லாது ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து விளம்பரங்களில் நடித்தும் உள்ளேன்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘தி நைட் மேனேஜர்’ என்ற வெப் சீரியஸ் மூலம் மிகவும் கவர்ச்சியாக முத்த காட்சிகளில் ஈடுபட்டு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இதனை அடுத்து சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவுடன் தொடர்பில் இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி தகவல்களை பரப்பி வருகின்றனர்.