Actress | நடிகைகள்
நடிகை ஸ்ரீதிவ்யா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்..! – என்ன செய்கிறார் பாருங்க..?
நடிகை ஸ்ரீதிவ்யா பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.
இவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் அனைத்துமே இவருக்கு பெயர் பெற்று தரும் படத்தின் வெற்றிக்கு அச்சாரம் விதமாகவும் அமைந்தன என்றால் அது மிகையாகாது.
தன்னுடைய குடும்ப பாங்கான நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார் நடிகை ஸ்ரீதிவ்யா. ஆனால், தற்போது ஆள் எங்கே இருக்கிறார்.. எங்கே போனார்..? என்ன ஆனார்..? என்ற எந்த விபரமும் தெரியவில்லை.
ஆனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் இடத்தை நிரப்ப இன்னும் எந்த நடிகையும் வரவில்லை என்பதுதான் கூடுதல் தகவல்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஊதா கலரு ரிப்பன் கட்டி வாலிபர் பசங்களை தன்பக்கம் கட்டி இழுத்தார் நடிகை ஸ்ரீதிவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து. இவருடைய பெயரை பிரபலப்படுத்தியது. ஆந்திராவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தன்னுடைய படிப்பை முடித்த இவர் தன்னுடைய 4 வயது முதலே நடித்துவருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தெலுங்கு சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் தோல்வியடைந்தது. அவரை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளியான பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இதனால் இவருடைய மார்க்கெட் தாறுமாறாக எகிறியது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
அதன் பிறகு காக்கி சட்டை, வெள்ளக்காரதுரை, மருது, ஈட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இருக்கிறார்.
காரணம் இவருக்கு வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற நிலையிலேயே கிடைக்கின்றன. நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நான் படங்களில் நடிக்காமல் கூட இருக்கிறேன் என்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.