Actress | நடிகைகள்
“ஏன்.. அம்மா கிளாமராக நடிக்க கூடாதா..?..” – வாணி போஜன் ஒரே போடு..! – வைரல் கிளிக்ஸ்..!
நடிகை வாணி போஜன் சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். நிச்சயமாக, தன்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் போராடி மிகப்பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் நடிகை வாணி போஜன் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதற்கு 100% பொருத்தமானவர்.
எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் ஒரு நடிகை சினிமாவில் முன்னுக்கு வருவதே மிகப்பெரிய கடினமான விஷயம். ஆனால், ஒரு பெண்ணாக பல்வேறு தடைகளை கடந்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார் சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் வாணி போஜன்.
விமானப்பணி பெண்ணாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய வாணி போஜன் துறையில் ஈடுபாடு காட்டி வந்தார். அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு தெய்வமகள் என்ற மெகா சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் வாணி போஜனக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தற்பொழுதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார்.
கடந்த வருடம் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார் வாணி போஜன். ஆனால், இந்த வருடம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். இவருடைய சினிமா எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்த படங்களில் நடிகை வாணி போஜனை கிளாமரான கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து நடிகை வாணி போஜனமும் கேட்ட பொழுது, ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரங்களில் கூட நடித்திருக்கிறீர்கள்.
தற்போது கவர்ச்சியாக நடிப்பதாக கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய பொழுது, படத்தில் தேவையென்றால் கவர்ச்சி காட்டுவதில் தவறு கிடையாது. ஏன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கிளாமர் காட்டக்கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா..? என்று கேட்டிருக்கிறார். ஆக, சீரியலில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த இவர் சினிமாவிலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஜெயிப்பாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!