vj chithu
Actress | நடிகைகள்

கூட படுத்தவளையே கொலை பண்ணிட்டான்.. சித்ரா ரூமில் இதை பாத்தேன்.. – போட்டு உடைத்த பிரபலம்..!

--- Advertisement ---

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சித்ரா. மேலும், சீரியல் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் விளம்பர வீடியோக்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருந்தார் சித்ரா.

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி பயணித்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

ஆனால் கெடுவாய்ப்பாக தன்னுடைய தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருவருடன் பிரபல தனியார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பொழுது தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை வட்டாரம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்தது.

vj chithu

இதுவரை சித்ரா எப்படி இறந்தார்..? தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா..? என்ற எந்த ஊர்ஜிதமான தகவலும் கிடைக்கவில்லை. ஒருபக்கம் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் நடிகை தற்கொலை செய்துகொண்டார் எனவும், அந்த குறிப்பிட்ட அரசியல்வாதிகள் சித்ராவை கொலை செய்துவிட்டு பிறகு தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்துகொண்டார் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் பல விதமான தகவல்கள் சித்ராவின் மரணத்தை சுற்றி மர்மமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

vj chithu

ஆரம்பம் முதலே சித்ராவின் மரணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருபவர் சக சீரியல் நடிகை ரேகா நாயர் என்பவர் சித்ரா மரணித்த அந்த நாளிலிருந்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, சித்ராவின் தனிப்பட்ட அந்தரங்கமான விஷயங்களை கூட பொதுவெளியில் போட்டு உடைத்த வருகிறார்.

vj chithu

சித்ராவை பற்றி அவர் கூறும் சில விஷயங்கள் ஒரு மறைந்த தோழியை பற்றின அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் இப்படி போட்டு உடைப்பது தவறு என்று கூறி வந்தாலும் அவருடைய மரணத்திற்கு நியாயம் கேட்கும் வழியில் இப்படியான விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது என்கிறார் ரேகா நாயர்.

இந்நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சித்ராவின் அறையில் டப்பா டப்பாவாக ஆணுறைகளை பார்த்துள்ளேன். சித்ராவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமும் உள்ளது. எப்போதாவது மது அருந்துவார். என்று கூறிய அவர், சித்ராவிற்கு நிச்சயக்கப்பட்ட ஹேம்நாத் என்ற நபரை பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹேம்நாத் பல பேரிடம் கடன் வாங்கி உள்ளான் எனக்கு தெரிந்த நடிகைகள் தோழிகளிடம் கூட வீட்டின் வாடகை கட்ட வேண்டும் என கூறி பிறகு கொடுத்து விடுகிறேன் என்று கூறி பணம் வாங்கிவிட்டு இதுவரை திருப்பித் தராமல் இருக்கின்றான்.

vj chithu

இப்படி பணம் கொடுத்தவர்கள் திரும்பி கேட்கத்தான் செய்வார்கள் அப்படி பணத்தை திருப்பி கேட்பவர்களை எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று சித்ராவின் மரணத்தில் சந்தேக வலைக்குள் அவர்களையும் இழுத்துக்கொண்டு வர முயற்சிக்கின்றான்.

சித்ராவின் பிரேத பரிசோதனையில் அவருடைய பின்பக்கத் தலை, முகம், கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. சித்ரா ஒரு 60 கிலோ இருப்பார். ஆனால் அவர் தூக்கில் தொங்கிய மின்விசிறி கொஞ்சம்கூட வளையவில்லை ஆகையால் அவரை கொலை செய்து விட்டுத்தான் மின்விசிறியில் தொங்க விட்டிருப்பார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்.

vj chithu

தன்னுடன் படுத்தவளையே ஹேம்நாத் கொன்னுட்டான். இதில் ஹேம்நாத் மட்டுமல்ல மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருக்கிறது என்று நான் சந்தேகிக்கிறேன் எனக்கு எப்போது போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்களோ அப்போதுதான் நான் அந்த நான்கு பேரின் பெயர்களை பொதுவெளியில் கூறுவேன்.

விரைவில் இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வரவிருக்கிறது அப்பொழுது என்னால் முடிந்தவற்றை கண்டிப்பாக நான் செய்வேன் என்று கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---